'சுவிட்ச் போடாமலே ஷாக் அடித்த கரண்ட் பில்'... 'தப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா'?... மிரளவைத்த பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தவறுதலாக மின் கட்டணம் அதிகமாகக் கணக்கிடப்பட்டு அனுப்பப்படுவது அவ்வப்போது நிகழும் சம்பவம் ஆகும். முதலில் மின் கட்டண பில்லை பார்ப்பவர்களுக்கு அது கடும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் பின்பு அந்த தவறு சரி செய்யப்படுவதும் வழக்கம். ஆனால் தற்போது நடந்துள்ள சம்பவம் தவறாகக் கணக்கிட்டாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்கிற அளவிற்கு நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டம் கிங்லா கிராமத்தைச் சேர்ந்தவர் பெமரம் படேல். விவசாயம் செய்து வரும் இவர், தனக்குச் சொந்தமான கடை ஒன்றை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த கடையை வாடகைக்கு எடுத்த நபர் அதில் வாகனங்களைப் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த கடைக்கான மின் கட்டணத்திற்கான பில் சமீபத்தில் வந்தது. அந்த பில்லை பார்த்த வாடகைக்குக் கடை வைத்திருக்கும் நபர் அதிர்ந்துபோனார்.

உடனே அந்த பில்லை எடுத்துக் கொண்டு கடையின் உரிமையாளரான பெமரம் படேலிடம் கொண்டு சென்று காட்டியுள்ளார். அந்த பில்லை பார்த்த பெமரம் படேனும் கொஞ்சம் ஆடித்தான் போனார். காரணம் அந்த கடைக்கான மாத மின்கட்டணமாக 3.71 கோடி ரூபாய் கட்டணம்  செலுத்தக் கோரி பில் அனுப்பப்பட்டிருந்தது. இரு மாதங்களில் மூன்று கோடியே 85 லட்சத்து 14 ஆயிரத்து 098 'யூனிட்' மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து பெமரம் படேல் அந்த ரசீதுடன் மாநில அரசின் மின் நிர்வாக மையத்திற்குச் சென்றார். அப்போது கணக்கீட்டாளரின் தவறால் இதுபோல் நடந்துள்ளதாகக் கூறிய அதிகாரிகள், சரியான மின் பயன்பாட்டினை கணக்கிட்டு ரூ.6,414 செலுத்தும்படி கூறினார்கள். அதன் பிறகு தான் பெமரம் படேலுக்கு உயிரே வந்தது. பில்லை பார்த்ததும் ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்பதை அப்போதே நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் தவறாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என நொந்து கொண்டார் பெமரம் படேல்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்