'வருவாய் குறைவு'...'ரயில்வே கட்டணம் எவ்வளவு உயர போகுது'?...அதிர்ச்சியில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபயணிகள் மற்றும் சரக்கு ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் சீரமைக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரயில்வே கட்டணங்கள் உயரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டண உயர்வு 20 சதவீதம் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.யாதவ், இந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டில், பயணிகள் கட்டணம் 155 கோடியும், சரக்கு கட்டணம் 3 ஆயிரத்து 901 கோடியும் வருவாய் குறைந்திருப்பதாக கூறினார். எனவே, வருமானம் ஈட்டும் நோக்கில், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த கட்டண உயர்வு மிகவும் கவனமுடன் பரிசீலனை செய்யப்பட கூடிய ஒன்று என தெரிவித்தார்.
மேலும் கட்டண உயர்வு நீண்ட ஆலோசனைக்கு பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்றும் குறிப்பிட்ட அவர், சாலை வழியான சரக்கு போக்குவரத்தை ரயில்வேயை நோக்கி ஈர்க்கச் செய்ய வேண்டும் என்பதே தங்களது இலக்கு என வாரிய தலைவர் வி.கே.யாதவ் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே ரயில் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் இந்த திட்டத்தால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மின்சார ரயில்களில் அதிரடி ஆஃபர்'...'ஒரே ஒரு பாஸ் மட்டும் போதும்'...மகிழ்ச்சியில் 'சென்னை மக்கள்'!
- ‘உதவிக்கு யாரும் இல்ல’!.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’!.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..!
- ‘சில்லறை’ பிரச்சனையால் ‘இறக்கிவிட்ட’ நடத்துநர்.. ‘ஆட்டோ’ பிடித்து வந்து பயணி செய்த ‘அதிர்ச்சி’ காரியம்.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- 'இது ரிசர்வேஷன்.. எறங்குங்க!'.. ஓடும் ரயிலில் தாயின் கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்!
- 'கொட்டிய மழை'...'அடர்ந்த இருள்'...'பதறிய இளம் பெண்'...நெகிழ வைத்த 'அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்!
- ‘கிளம்பிய ரயிலில்’... ‘அவசரத்தில் ஏறமுயன்று’... ‘தவறி விழப் போன பயணி’... 'நொடியில் காப்பாற்றிய போலீஸ்'!
- ‘தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு’.. முன்பதிவு எப்போ..? விவரம் உள்ளே..!
- 'நெருங்கிவிட்ட ரயில்!'.. தணடவாளத்தில் தவறி விழுந்த பெண்.. சக பயணிகள் செய்த சாமர்த்திய காரியம்!
- ‘ஒரு கிலோ மீட்டர் தொலைவில்’.. ‘அடுத்தடுத்து கிடைத்த 4 சடலங்கள்’.. ‘போலீஸாரை அதிரவைத்த சம்பவம்’..
- ‘இந்தியாவிலேயே முதல்முறையாக’.. ‘தனியார் நிகழ்ச்சிகளுக்கு’.. ‘வாடகைக்கு விடப்படும் ரயில் நிலையம்’..