450 கி.மீ தொலைவில் ஃபானி புயல் : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் 10 லட்சம் மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகிலேயே நிலநடுக்கோட்டுக்கு சற்று அருகே, அதாவது சப்-டிராபிக்கல் ஸோனில் இருக்கும் ஒரே தீபகற்ப நிலம் என்றால் அது தமிழகத்தோடு சேர்ந்த தென்பகுதிதான்.

இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்லாது, ஆசியா மட்டுமல்லாது, உலகிலேயே இரண்டுவிதமான பருவ மழையையும் ஒரே வருடத்தில் பெறும் நிலம் என்பதாலேயே இங்கு உயிர்கள், உணவுற்பத்தி, மொழி, நாகரிகம் என்பதற்கான மிக நீண்ட வரலாறு முதன்மைத்துவம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் பெருகி வரும் புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக, தொடர்ந்து நாம் சுனாமி, தானே, வர்தா, நடா, கஜா புயல்களை சந்தித்துவந்தோம். இதில் சுனாமி மட்டுமே பேரலை. மற்றவையெல்லாம் பெரும் புயல்கள். இடையில் சென்னைக்கென்றே 2 கோரமான வெள்ளப் பாதிப்புகளையும் தமிழ் மக்கள் சந்தித்தனர்.

இப்போது அடுத்த புயலாக இந்தியத் துணைக் கண்டத்தை குறிவைத்த ஃபானி புயல் தன்னைப் பற்றிய பெரும் பரபரப்பை நம்மிடையே உருவாக்கியுள்ளது.  முன்னதாக தமிழகத்தை ஃபானி புயல் அட்டாக் செய்யலாம் என்று கருதப்பட்டு, ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த புயல் யூ-டர்ன் அடித்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஒடிஷா மாநிலம் பூரிக்கு 450 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் தற்போது நிலைகொண்டுள்ள இந்த புயல், நாளை பிற்பகலில் புயல் கரையை கடக்கும் என்றும் இதனால் ஒடிஷா, மேற்கு வங்கத்தில் அதி கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து, ஃபானி புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் கடலோர பகுதிகளில் இருக்கும் 10 லட்சம் மக்கள்  அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.

WEATHER, FANICYCLONE, ODISHA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்