'பெட்ரூமில் 2 மகள்கள் கொலை'.. 'சுவரில் எழுதிவைத்துவிட்டு'.. '8வது மாடி பால்கனியில் இருந்து குதித்த குடும்பம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியில் உள்ள இந்தியாபுரம் அடுக்குமாடிக் குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து இரண்டு பெண்களும், ஒரு ஆண் நபரும் ஒரே சமயத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவர்களுள், பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய பெண் மட்டும் சிகிச்சைப் பிரிவில் போராடி வருகிறார். இறந்தவர்கள் 2 பேரும் கணவன், மனைவி என்றும், பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண், இறந்து போன ஆணின் பிஸினஸ் பார்ட்னர் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி போலீஸார் விசாரிக்கும்போது குல்சன் வாசுதேவ் என்பவர் தன் மனைவி, பிஸினஸ் பார்ட்னரான பெண் மற்றும் தனது 2 மகள்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், இதனிடையே ராகேஷ் வர்மா என்பவர் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விஷயத்தில் குல்சன் வாசுதேவை ஏமாற்றிவிட்டதால், வேறு வழி தெரியாத அனைவரும் 8வது மாடியின் பால்கனியில் இருந்து குதித்து இந்த தற்கொலை முடிவினை எடுத்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தத் தற்கொலைக்கு முன்னதாக, கணவர் குல்சன் வாசுதேவ் மற்றும் மனைவி இருவரும் தங்கள் இரு மகள்ககளும் தூங்கும்போது, அவர்களை பெட்ரூமிலேயே வைத்து கொன்றுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இதனை குல்சன் வாசுதேவ் தன் வீட்டு சுவரில் குறிப்பு போல் எழுதி வைத்திருப்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். மேற்கொண்டு விசாரித்தும் வருகின்றன்ர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
'டியூசன் முடிந்து'... 'தங்கையுடன் வந்த 10 வயது சிறுமிக்கு'... '73 வயது முதியவரால் நேர்ந்த பரிதாபம்'!
தொடர்புடைய செய்திகள்
- ‘பாட்டியை’ பிடித்து வைத்த ‘இன்ஜினியரிங் பட்டதாரி’.. தாயிடம் ‘பணம்’ கேட்டு செய்த அதிர்ச்சி காரியம்.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘பள்ளிக்கு போகச் சொல்லி கண்டித்த தாய்’.. 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..! சென்னையில் நடந்த சோகம்..!
- 'மின்னல் வேகத்தில் வந்த ரயில்'...'திடீரென கைக்குழந்தையுடன் பாய்ந்த தாய்'...நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
- பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்..! ‘அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்’! பதற வைத்த தூத்துக்குடி சம்பவம்..!
- ‘முன்பணம் 5 லட்சம்’.. ‘பாக்கி பணம் இன்னும் தரல’! டவரில் ஏறி சுருக்கு கயிறு மாட்டிய முதியவர்..! பரபரப்பு சம்பவம்..!
- 'வேற வழி தெரில!'.. 'மண்ணெண்ணையுடன் வந்த.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர்!'.. காவல் நிலையம் முன்பு நடந்த விபரீதம்!
- ‘என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது’! ‘படிக்கவே பிடிக்கல..!’ ஃபினாயில் குடித்த கல்லூரி மாணவி..! சிக்கிய உருக்கமான கடிதம்..!
- ‘பாத்ரூம் கட்ட பக்கத்துவீட்டுக்காரர் எதிர்ப்பு’.. கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தாய்..!
- 'அப்பா வாங்கிய கடன்'...'அம்மா'க்கு ஏன் கஷ்டம் கொடுக்கணும்'...'கல்யாண பெண்ணின் நெஞ்சை உருக்கும் சோகம்!
- 'ஃபாத்திமாவைத் தொடர்ந்து ஜெப்ரா பர்வீன்!'.. 'திருச்சி' கல்லூரியில் 'வெளிமாநில' மாணவிக்கு நேர்ந்த சோகம்!