'இறுதிச்சடங்கில்' பங்கேற்ற 'உறவினர்கள்'!.. 'இறந்தவருக்கு' கொரோனா என்று 'அடுத்தநாள்' வெளியான தகவலால் 'பரபரப்பு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானாவின் ஷகிராபாத்தைச் சேர்ந்த 55 வயது பெண்மணி ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து அப்பெண்ணின் உடலை அப்பெண்ணின் உறவினர்கள் பெற்றுக்கொண்டு அன்றைய தினமே இறுதிச் சடங்கினை செய்து அடக்கம் செய்தனர். ஆனால் அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் அடுத்த நாள்தான் வெளியானது.  அதில் அப்பெண்ணுக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது.

உடனே விரைந்து சென்ற சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் அப்பெண்ணிற்கு இறுதிச் சடங்கை மேற்கொண்டவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுள் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அந்த 19 பேரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதோடு, அவர்களின் வீடு இருக்கும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்