போலீசையே பயன்படுத்தி பக்கா ஸ்கெட்ச்.. மொத்த குடும்பமும்.. இது வேற லெவல் திருட்டு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போலீசை நம்ப வைத்து ஒரு குடும்பமே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

வீட்டில் நகை திருட்டு

கர்நாடக மாநிலம் சர்ஜாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி பிரகாஷ். இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை போயுள்ளது. உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிக்கிய திருடன்

இந்த சமயத்தில் தனது வீட்டுக்கு அருகே அடிக்கடி ஒரு நபர் வந்து சென்றதாகவும், அவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் ரவி பிரகாஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தீபக் என்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தீபக், நகையை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து தான் திருடிய நகைகளை அடகு வைத்த அடகு கடை ஒன்றையும் காண்பித்துள்ளார். பின்னர் அந்த கடையில் இருந்து நகைகளை மீட்டு ரவி பிரகாஷிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

ரகசிய கண்காணிப்பு

ஆனாலும் போலீசாருக்கு இருவர் மீதும் ஒருவித சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் ரவி பிரகாஷ் மற்றும் தீபக்கின் நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போதுதான் ஒரு அதிர்ச்சித் தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. ரவி பிரகாஷ் மற்றும் தீபக் ஆகிய இருவரும் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில், ரவி பிரகாஷ் தனது வீட்டில் நகை காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் கொடுத்துவிட்டு, பின்னர் தீபக் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். பின்னர் போலீசார் மூலம் தாங்கள் அடகு வைத்த நகையை செலவே இல்லாமல் மீட்டுள்ளனர்.

அதிரவைத்த குடும்பம்

பின்னர் சிறையிலுள்ள தீபக்கை தனது குடும்பத்தில் ஒருவரை வைத்து ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். இதனை அடுத்து குடும்பத்துடன் வேறு இடத்துக்கு குடி பெயர்ந்துள்ளனர். இப்படி ஒவ்வொரு இடமாக இவர்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் அவரது குடும்பமே ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிசிடிவில் தெரியவந்த உண்மை

நகை திருடு போனதாக கூறப்பட்ட அன்றைய தினத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தீபக், ரவி பிரகாஷ் வீட்டுக்கு அருகில் நகை பையுடன் சாவகாசமாக நடந்து சென்றது பதிவாகியுள்ளது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்தே இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

ஒரே பாணியில் கொள்ளை

இந்த கும்பல் இதே பாணியில் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் மோசடிகள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் இவர்களது புகைப்படங்களை அனுப்பி இதே பாணியில் புகார்கள் வந்துள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்துல் கலாம் கேட்ட 'அந்த' கேள்வி... கண்பார்வை போனாலும் வியக்க வைக்கும் சாதனை.. பாலிவுட்டில் படமாகிறது.. யார் இந்த ஸ்ரீகாந்த் பொல்லா?

VIDEO: கெட்ட வார்த்தையால் பத்திரிக்கையாளர்களை திட்டிய ஜோ பைடன்.. மைக் ஆஃப்ல இருக்குனு நினைச்சு வார்த்தைய விட்டுட்டாரு.. டிரெண்டிங் ஆகும் வீடியோ!

FAMILY FILE FAKE THEFT COMPLAINT POLICE, சிசிடிவி, சர்ஜாபுரம், திருடன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்