'அது எப்படி ராகுலைப் பார்த்து'.. 'அப்படிச் சொல்லலாம்?'... அவதூறு வழக்கில் சிக்கிய சுப்ரமணிய சுவாமி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றிய அவதூறு பேச்சு காரணமாக, பாஜக ராஜ்ய சபா எம்.பியான சுப்ரமணிய சுவாமி மீது சட்டீஸ்கர் போலீஸார் வெவ்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி ஜாஷ்பூர் மாவட்டத்தின் காங்கிரஸ் செயலாளர் பவன் அகர்வால் கொடுத்த புகாரின் படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதையில் இருந்ததாக, சுப்ரமணிய சுவாமி அவதூறு கருத்தினை வெளியிட்டதைக் கண்டித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதன் அடிப்படையில் சுப்ரமணிய சுவாமி மீது 504, 505, 511 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அவதூறு கருத்துக்களைப் பரப்பியதற்காகவும், கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை சீர்குலைத்ததற்காகவும், இருவேறு கட்சிகளுக்குள் பகையைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும், கட்சி உறுப்பினர்களின் அமைதியை குலைத்ததற்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டுமன்றி சட்டீஸ்கரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள காங்கிரஸ் இளைஞர்களும், மகளிர் அணி உறுப்பினர்களும் சுப்ரமணிய சுவாமி மீது வலுவான புகாரை அளித்ததை அடுத்து, சட்டீஸ்கர் போலீஸ் சுப்ரமணிய சுவாமி மீது FIR போட்டு, வழக்குப் பதிவு செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்