"கணவருக்கு ஆண்மையில்லை".. சொந்த பந்தம் முன்னாடி பொய் சொன்ன மனைவிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில்  உறவினர்கள் முன்னிலையில் தனது கணவர் ஆண்மையற்றவர் என பொய் கூறிய மனைவிக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நீ செத்தா யார் வருவா.?" .. இறக்கும் முன்னே தனக்கு கல்லறை கட்டிய பெண்மணி.. இறுதியில் கலங்க வைத்த சோகம்.!

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். தனது மனைவி தன்னை பற்றி அவதூறாக பேசிவருவதாகவும், குறிப்பாக தான் ஆண்மையற்றவர் என்று அடிக்கடி குறிப்பிட்டு தகராறு செய்வதாகவும் கூறியுள்ளார் அந்த இளைஞர்.

இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அந்த இளைஞர்,"எனது மனைவி உறவினர்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் ஆண்மையற்றவன் என்று கூறிவருகிறார். எந்தவித ஆதாரமும் இல்லாமல், அவர் இவ்வாறு கூறிவருவதால் எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும்,மனைவியின் இந்த செயல் கொடுமைப்படுத்துவது போல் உள்ளது. ஆகவே எனக்கு விவாகரத்து வழங்கிட வேண்டும்" எனக் கூறினார். இருப்பினும், இளைஞரின் மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் அந்த இளைஞர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள்,"ஒரு நபரை எந்தவித மருத்துவ ஆதாரமும் இன்றி அவரை ஆண்மையற்றவர் என்று உறவினர்கள் முன்னிலையில் கூறுவது மிகக்கொடுமையான செயலாகும். இது அவரின் மரியாதையை குலைப்பதுடன், அவருக்கு கடுமையான வலியையும் மன வேதனையையும் ஏற்படுத்தும். ஒரு நல்ல பெண்மணி ஒருபோதும் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டார். ஆண்மையற்றவர்  என்று பொய்யான குற்றச்சாட்டை கூறுவது நிச்சயம் கொடுமைப்படுத்துதலுக்கு நிகரான ஒன்றுதான். இந்து திருமணச் சட்டம் 13 (1) பிரிவு இதனை உறுதி செய்கிறது. எனவே, கணவரை ஒரு மனைவி உறவினர்கள் முன்னிலையில் ஆண்மையற்றவர் என பொய்யாக குற்றம்சாட்டினால், அந்தக் கணவர் 'கொடுமைப்படுத்துதல்' என்ற அடிப்படையில் விவகாரத்து கோரலாம்" எனத் தெரிவித்தனர்.

தனது மனைவி தன்னை ஆண்மையற்றவர் என்று உறவினர்கள் முன்னிலையில் பொய் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு இளைஞர் ஒருவர் சென்ற நிலையில், விவாகரத்து கோர இளைஞருக்கு உரிமை உண்டு என நீதிபதிகள் தெரிவித்திருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "வேலையைவிட்டு நிறுத்த போறிங்களா?".. ட்விட்டர் ஊழியர்களின் கேள்விக்கு எலான் மஸ்க் அளித்த நூதன பதில்.. என்ன இப்படி சொல்லிட்டாரு?

KARNATAKA, HIGH COURT, KARNATAKA HC, FALSE IMPOTENCY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்