ஒரிஜினல் போலீஸ்கிட்டயே அபராதம்.. ஆள் தெரியாம காசு கேட்ட போலி போலீஸ்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்டே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉண்மையான அதிகாரிகளிடம் பணம் பறிக்க ஈடுபட முயன்ற போலி போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அசாம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அசாம் மாநிலத்தின் தேஜ்பூரில் உள்ள பருவா சாரியாலி என்ற இடத்தில் வாகன ஓட்டிகளிடையே விதிமீறல் செய்பவர்களிடம் போலி போலீஸ் அதிகாரி ஒருவர் அபராதம் விதித்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன
அபராதம்
விதிமீறலில் ஈடுபட்டதாக வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையினை கேட்டிருக்கிறார் அந்த போலி போக்குவரத்து அதிகாரி. அப்போது, அவருடைய வாகனத்தை கண்ட பயணிகள் சிலர் சந்தேகம் அடைந்திருக்கின்றனர். உடனடியாக அருகில் இருந்த போக்குவரத்து அதிகாரிகளிடத்தில் இதுபற்றி கூறியுள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை அதிகாரிகள் கண்காணித்திருக்கிறார்கள். அவர்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை பற்றி மேலதிகாரிகளிடத்தில் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், மஃப்டியில் இருந்த போலீஸ் அதிகாரிக்கும் அவர் அபராதம் விதிக்க முயன்றதாக தெரிகிறது. இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உயர் போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்திருக்கின்றனர்.
இதற்கு முன்பே
கைது செய்யப்பட்டவரிடத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அசாம் மாநிலத்தின் ரங்கியா மற்றும் நாகோன் ஆகிய பகுதிகளிலும் அவர் இதே போன்று வேடமணிந்து மக்களிடம் இருந்து பணத்தை பெற்றது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி,"கைது செய்யப்பட்டவர் சிறுவயதில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என நினைத்திருக்கிறார். ஆனால், அவருக்கு போதிய கல்வி தகுதி இல்லாததால் காவல்துறையினர் போன்று வேடமணிந்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்" என்றார்.
அசாம் மாநிலத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி போல வேடமணிந்து விதி மீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | "வீடோட மொத்த தீவும் விற்பனைக்கு".. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.. விலையை கேட்டுட்டு குஷியான மக்கள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புருஷனை காணோம்னு போலீசில் புகாரளித்த மனைவி.. விசாரணைல வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. தாய், மற்றும் மகனை கைது செய்த போலீஸ்..!
- இப்படி ஒரு எச்சரிக்கையா.. போலீசாரின் நூதன முயற்சி.. இனி போதையில வண்டி ஓட்டவே யோசிப்பாங்க.. வைரலாகும் வீடியோ..!
- "சபாஷ், பட்டையை கெளப்பிட்டீங்க.." அடுத்தடுத்து வந்த புகார்கள்.. West Bengal வரை சென்று அதிரடி காட்டிய 'போலீஸ்'
- "அது வெறும் ஸ்பா இல்ல.. உள்ளே வேற என்னமோ நடக்குது".. போலீசுக்கு கிடைச்ச ரகசிய தகவல்.. கஸ்டமர் போல போன போலீஸ் அதிகாரி.. வெளிவந்த பகீர் உண்மை.!
- "ஹலோ சார், இந்த தெரு பக்கத்துல.." போலீஸுக்கு வந்த போன் கால்.. "ஸ்பாட்'ல போய் பாத்ததும்".. அதிர்ந்த போலீஸ்.. சோதனை பண்ணதுல கெடச்ச ஒரு 'ரசீது'
- "என் பெயரை நெஞ்சுல பச்சை குத்தி.. காதலை நிரூபிச்சு காட்டு".. காதலிக்கு கண்டீஷன் போட்ட காதலன்.. கையில் காப்பு மாட்டிய காவல்துறை..!
- மனைவியின் தங்கச்சி மீது காதல்.. வசிய மருந்தோட வீட்டுக்கு போன கணவன்.. அலேக்காக தூக்கிய போலீஸ்..திடுக்கிட்ட திருப்பத்தூர்..!
- "என்ன, இதுக்காகவா 250 ரூபா 'Fine' போட்டாங்க??.." போலீஸ் கொடுத்த ரசீது பாத்து குழம்பிப் போன 'நெட்டிசன்கள்'!!
- நைட்ல போன் பேசிய கணவனை இழந்த பெண்... சந்தேகப்பட்டு கொழுந்தன் செஞ்ச விபரீதம்.. அதிர்ச்சியில் உறைந்துபோன உறவினர்கள்..!
- சாலை ஓரத்துல கிடந்த Bag.. உள்ள கட்டுக்கட்டா பணம்.. கொஞ்சம் கூட யோசிக்காம போலீஸ் கான்ஸ்டபிள் செஞ்ச காரியத்தால் நெகிழ்ந்துபோன அதிகாரிகள்..!