'அக்டோபர் 15 வரை'... 'உணவங்கள் மூடப்படுவதாக வெளியான தகவல்'... மத்திய அரசு விளக்கம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை கூறியுள்ளதாவது, ‘சுற்றுலா அமைச்சகத்தின் பெயரில் போலி கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, சுற்றுலாத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து பரப்பப்படுகிறது. இந்த விவகாரம் சுற்றுலா அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்ததுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தினால் அத்தகைய கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்று அந்த அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இதேபோல் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற போலிச் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் போலித் தகவல் சுற்றறிக்கை குறித்து சுற்றுலா அமைச்சகம் ஏற்கெனவே சமூக ஊடகங்களில் மறுப்புகளை வெளியிட்டுள்ளதுடன், மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகாரும் அளித்தது. ஆனால் போலிச் செய்தி மீண்டும் பரப்பப்படுகிறது. இதுபோன்ற செய்திகளைப் புறக்கணிக்குமாறும், அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புகளை மட்டுமே நம்புமாறும் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்றும் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அவர் 'இறந்ததையே' 2 நாள் கழிச்சு தான் சொன்னாங்க... ஒருவேளை இப்டி இருக்குமோ?... 'அந்த' நாட்டின் மீது சந்தேகம் எழுப்பும் வல்லுநர்கள்!
- 'இந்த' வழக்கில் கைதானால் 'ஜாமீன்' கிடையாது... 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை... 'அவசர' சட்டம் கொண்டு வரும் மத்திய அரசு!
- ஊரடங்கில் ‘செம’ லாபம் பார்த்த ‘நெட்பிளிக்ஸ்’.. 'Money Heist' மட்டுமில்ல ‘இதையும்’ ரொம்ப பேர் பாத்திருக்காங்க..!
- நாயின் ‘மோப்பத்திறன்’ மூலம் கொரோனாவை கண்டறியும் ஆராய்ச்சி.. ‘இதுமட்டும் சாத்தியமானால்..!’.. நம்பிக்கை தெரிவிக்கும் விஞ்ஞானிகள்..!
- கொரோனாவால் 'பாதிக்கப்பட்டவர்கள்' குறைவு... குணமடைந்தவர்கள் அதிகம்... 'நம்பிக்கையளிக்கும்' தமிழக மாவட்டம்!
- 'கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு...' 'முதல் கட்டம் வெற்றி அடைஞ்சுட்டோம்...' எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு...!
- 'மனித அறிவு' கொரோனாவை விட 'சக்தி வாய்ந்தது...' 'நம்பிக்கை தரும் ஆக்ஸ்போர்டு' விஞ்ஞானிகள் குழு...' 'நாளை' முதல் மனிதர்களிடம் 'தடுப்பூசி சோதனை...'
- 'என்னோட மக்கள் தான் முக்கியம்'... 'ட்ரம்ப் கொளுத்திய முதல் சரவெடி'... 'என்ன நடக்கும்'... பல கேள்விகளோடு இந்தியர்கள்!
- 'உத்தரவை மதிக்காத மக்கள்'... 'எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீடு வீடா பேப்பர் போட கூடாது'... ஊரடங்கு தளர்வு வாபஸ்!
- 'கொத்துக் கொத்தாக போன உயிர்கள்'... 'வீதியில் நின்று கதறிய மக்கள்'... '45 ஆயிரத்தை கடந்த பலி'... வல்லரசு அமெரிக்காவில் என்ன நடக்கிறது?