‘ஏடிஎம் சேவையில் புதிய மாற்றம்’.. ‘ரிசர்வ் வங்கி’ வெளியிட்டுள்ள ‘முக்கிய அறிவிப்பு..’
முகப்பு > செய்திகள் > இந்தியாதொழில்நுட்பக் காரணங்களால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாமல் போனால் அதை இலவச பரிவர்த்தனையில் சேர்க்கக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்-களில் இருந்து மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்-களில் இருந்து மாதம் 3 முறையும் கட்டணமில்லாமல் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வரம்பைத் தாண்டி பணம் எடுக்கும்போது அதற்கு தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் பண இருப்பை பார்ப்பது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாமல் எடுக்க முடியாமல் போவது போன்றவையும் பரிவர்த்தனையாக சேர்க்கப்படுகிறது.
இந்நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஹார்டுவேர், சாஃப்ட்வேர் பிரச்சனைகளால் பணம் எடுக்க முடியாதபோது அதை பரிவர்த்தனை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருப்பை பார்ப்பது, காசோலை புத்தகம் வழங்கக் கோருவது, வரி செலுத்துவது, பண பரிமாற்றம் போன்ற ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை இலவச பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள்’.. காஷ்மீர் விவகாரத்தில் ‘ரஜினிகாந்த் காட்டம்..’
- ‘அவரு எப்படி, அப்டி பேசலாம்’... ‘கடுப்பான பிசிசிஐ’... ‘நடவடிக்கை எடுக்க முடிவு’!
- ‘‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்’... ‘களமிறங்கும் ஆல்ரவுண்டர் மன்னன்'... ‘அப்படி என்ன ஸ்பெஷல்’!
- 'அசால்ட் காட்டிய இந்திய வீரர்'... ‘மிரண்டுப்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்‘... வைரலான வீடியோ!
- ‘விரைவில் இலவச வைஃபை’... ‘15 ஜிபி ஃப்ரீ டேட்டா’... ‘கலக்கும் மாநில அரசு’!
- "ஹலோ, Modi ji ஆ? கடைய எப்போ sir தொறப்பீங்க??" Video of 'Kudi'magan's demand to Modi goes viral
- 'பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணீர் வேண்டாம்'...'ஏடிஎம் மூலம் தண்ணீர்'... அசத்தல் முயற்சி!
- 'யாருக்கு தெரியும்.. ஃபியூச்சர்ல நம்மளலாம்'.. 'தல'யின் 'பஞ்ச்'சும் 'பாட்டும்'.. வைரல் வீடியோ!
- ‘வெஸ்ட் இண்டீஸை திணறடித்த இளம் வீரர்’... ‘அறிமுகப் போட்டியிலேயே அசத்தல்'!
- ‘அதே நாளிலா மோடி Man vs Wild ஷூட்டிங்கில் இருந்தார்.?’ புதிதாக வெடித்துள்ள சர்ச்சை..