'இந்தியாவையே அதிரவைத்த கர்ப்பிணி யானையின் கொடூர மரணம்'... 'என்னதான் நடந்தது'?... பரபரப்பை கிளப்பியுள்ள புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள கர்ப்பிணி யானை கொடூரமாக உயிரிழந்த விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

கேரள மாநிலம் மலப்புரம் வனப்பகுதிக்குள் இருந்த கர்ப்பிணி யானை ஒன்று பசிக்காக ஊருக்குள் வந்திருக்கிறது. அப்போது அங்குள்ள மக்கள் அந்த யானைக்கு உணவளித்துள்ளார்கள். அதில் யானைக்கு உணவாக வழங்கப்பட அண்ணாசி பழத்தில் வெடி மருந்து இருந்ததாகவும், அதனால் தான் யானை உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என, நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகையான இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ், அங்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள, இந்திய வனத்துறை அதிகாரி ஏ.பி. க்யூமை பேட்டியெடுத்து செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறும்போது, ''யானைக்கு யாரும் அண்ணாசி பழத்தில் வெடி மருந்து வைத்துக் கொடுக்கவில்லை என நினைக்கிறேன். அதே நேரத்தில் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, வெடி மருந்து நிரப்பப்பட்ட அண்ணாசி பழங்களை யானை உண்டதாகத் தெரிகிறது.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், விலங்குகளிடம் இருந்து தங்களையும், தங்களது பயிர்களையும் பாதுகாத்துக் கொள்ள இதுபோன்று செய்கிறார்கள். மேலும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பதற்காக வலைகளை வைத்துள்ளார்கள். அதில் சில நேரம் காட்டுப் பன்றிகள் மட்டுமல்லாது, மற்ற சில விலங்குகளும் சிக்கிவிடுகிறது. இறந்த யானைக்கு 15 வயது. அதன் மரணம் அனைவரின் மனதிலும் நீங்காத ரணத்தை ஏற்படுத்திவிட்டது'' என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே யானையைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் டேவிட் கூறும்போது, ''நான் 250க்கும் மேற்பட்ட யானைகளைப் பிரேதப் பரிசோதனை செய்துள்ளேன். ஆனால் இறந்த யானையின் குட்டியை முதல் முறையாகக் கையில் எடுத்தபோது நான் நிலைகுலைந்து விட்டேன்'' என உருக்கத்துடன் கூறியுள்ளார். இதனிடையே தற்போது இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்