Fact Check : காதலியை சூட்கேசில் வைத்து கல்லூரி விடுதிக்கு கொண்டு வந்த மாணவர்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.. உண்மை என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில தினங்களாக, சூட்கேஸில் காதலியை மறைத்து வைத்து, கல்லூரி விடுதிக்கு கொண்டு சென்றதாக பரவி வரும் வீடியோ பற்றி, சில தகவல்கள் வெளி வந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில், நாள் தோறும் நேரம் செலவழிக்கும் நாம், நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்.
அதே போல, திடீரென ஏதாவது ஒரு நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், நெட்டிசன்கள் மத்தியில்; அதிகம் வைரலாவதையும் கவனித்துள்ளோம். எங்கு, எப்போது நடந்த சம்பவம் என்பது கூட தெரியாமல், அது நடந்த காரணங்களுக்காக அந்த நிகழ்வு பெரிய அளவில் பகிரவும் படும்.
சிசிடிவி வீடியோ
இந்நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான், இணையம் முழுவதையும் ஆக்கிரமித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின், கடலோர மாவட்டமான உடுப்பியில், 'மனிப்பால்' என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள பொறியியல் கல்லாரியில் நடந்த சம்பவம் என்ற பெயரில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானது.
சூட்கேஸில் இருந்த பெண்
அந்த வீடியோவில், கல்லூரி மாணவர் ஒருவர், மிகப் பெரிய சூட்கேஸ் ஒன்றுடன், தட்டுத் தடுமாறி, கல்லூரி விடுதிக்கு வருகிறார். அந்த சூட்கேஸ் பெரிய அளவில் இருந்ததால், விடுதியின் பாதுகாவலர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும், அதில் என்ன இருக்கிறது என்றும் அவர்கள் கேட்கின்றனர். இதற்கு அந்த கல்லூரி மாணவர், ஏதேதோ விளக்கம் கொடுத்த போதும், பாதுகாவலர்களுக்கு சந்தேகம் தீரவில்லை.
இதனால்,சூட்கேஸை திறந்து காட்டுமாறு, அவர்கள் கூறியுள்ளனர். இதன் பிறகும், அந்த மாணவர் சமாளிக்க பார்த்த நிலையில், அவர்கள் சந்தேகம் குறையவில்லை. இறுதியில், அந்த இளைஞரும் சூட்கேஸை திறக்க, அதனுள் இருந்து ஒரு பெண் வருவதைக் கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இணையத்தில் வைரல்
அந்த பெண், மாணவரின் காதலர் தான் என்றும், உள்ளே யாரையும் விட மாட்டார்கள் என்பதால், இப்படி சூட்கேஸில் வைத்து எடுத்து செல்ல முயன்ற போது, சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள், திடீரென இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
கல்லூரி விளக்கம்
இது தொடர்பாக வெளியான தகவலை, சம்மந்தப்பட்ட அந்த கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ள நிலையில், பழைய வீடியோ தான், தற்போது மீண்டும் எங்களது கல்லூரி பெயரில் டிரெண்ட் ஆகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், மணிபால் பகுதியைச் சேர்ந்த எந்த கல்லூரியிலும் இப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
ஒரு பக்கம், காட்டுத்தீ போல் இந்த வீடியோ பரவி, மீம்ஸ்கள் கூட அதிகம் பகிரப்பட்டு வந்தது. இன்னொரு பக்கம், வீடியோ போலி என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதால், நெட்டிசன்கள் குழம்பிப் போயுள்ளனர். இதில், உண்மை நிலவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை போலவே, இந்த சிசிடிவி வீடியோ, தற்போது எடுக்கப்பட்டது கிடையாது. கடந்த 2019 ஆம் ஆண்டிலும், இதே வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவியிருந்தது. தற்போது, அதே வீடியோ மீண்டும் பரவி வருவதால், இதன் உண்மைத் தன்மையில் தெளிவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
Content : Social media
Incident : Hostel CCTV video
Fact check : False
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கடைசி பந்தில் 5 ரன் வேணும்.. சிக்ஸ் போகல, நோ பாலும் போடல.. ஆனாலும் நடந்த அதிசயம்.. ஃபீல்டர் பெர்ஃபார்மன்ஸ் தான் ஹைலைட்டே
- திடீரென தீ பிடித்து எரிந்த லாரி.. பயத்தில் குதித்த டிரைவர்.. மறுநொடியே வந்த நபர் சூப்பர் ஹீரோவாக மாறி சாகசம்
- "மன ஸ்டேடு ஆந்திரா.." அல்லு அர்ஜுனாவாகவே மாறிய டேவிட் வார்னர்.. 'புஷ்பா' ஃபீவரில் சிக்கிக் கொண்ட கிரிக்கெட் வீரர்
- ஒரு நிமிசத்தில இப்படி செய்ய முடியுமா? .. ராணுவ வீரரின் அசாத்திய சாதனை
- மணமேடையிலேயே அசந்து தூங்கிய மணமகள்... மாப்பிள்ளை சார் என்ன பன்றார் பாருங்க... வைரல் வீடியோ!
- இப்படி ஒரு ரன் அவுட்ட எங்கயாவது பாத்ததுண்டா யுவர் ஆனர்.. வைரலாகும் வீடியோ.. பாவம் யா அந்த பேட்ஸ்மேன்
- "பேராண்டி.. நீ போய் Ball-அ போடு.." Bat-ம் கையுமாக தூள் கிளப்பும் 'தாத்தா'.. இவருக்கு வயசாகல!
- UK வில் தொடங்கி US வரை.. ஒரே ஒரு பயணிக்காக பறந்த விமானம்.. மறக்க முடியாத அளவு சம்பவம்
- எனக்கு ஏன் ஆண்டவா கல்யாணம் பண்ணி வெச்சே??.. பாராகிளைடிங் போது அழுது புலம்பிய இளம்பெண்.. நடுவானில் நடந்த சம்பவம்
- "அய்யோ.. அத்தன காய்கறியும் வீணாச்சே".. நடுரோட்டில் அடிவாங்கியபடி.. கதறி அழுத 'பெண்' வியாபாரி!