‘பேசுறதெல்லாம் பேசிட்டு’.. ஒப்பந்தத்தை மீறி ‘கிழக்கு லடாக்கில்’.. சீனா செஞ்ச காரியம்! பதற்றத்தை அதிகரிக்கும் சாட்டிலைட் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா- சீனா கட்டுப்பாடு எல்லைக் கோட்டுப்பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கைகளில் கம்புகளுடன் அத்துமீறி வரும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்காக் ஏரிப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் கட்டுப்பாட்டை மீறவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் செய்ததால் , அதற்கு பதில் நடவடிக்கை எடுக்கும் விதமாகவே தாங்கள் செயல்பட்டதாக சீன ராணுவத்தின் மேற்குபடை கமாண்டர் ஹாங் சுலி குற்றம்சாட்டியிருந்தார்.
இதனை மறுத்த இந்திய ராணுவம், “எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை சமநிலைக்குக் கொண்டுவர இந்தியா உறுதி கொண்டுள்ள நேரத்தில், சீனா தொடர்ந்து பதற்றத்தை உண்டாக்கி வருவதாகவும், துப்பாக்கி சூடு, எல்லை தாண்டுதல் உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் இந்திய ராணுவம் ஈடுபட முயற்சிக்காத சூழலில், ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறவும், எல்லைகளில் பதற்றத்தை உண்டாக்கவும் செய்து வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளது.
மேலும், “2020 செப்டம்பர் 07-ம் தேதி அன்று இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டப்பட்டது. ஆனாலும் நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டபோதும் கூட, இந்திய படைகள் பொறுமையுடனும், பொறுப்புடனும் தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கும் உறுதியுடனும் இருக்கிறது” என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில்தான் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கைகளில் ஈட்டி கம்புகளுடன் அணிவகுத்து முன்னேறி வரும் சாட்டிலைட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “பாகிஸ்தானுடன் இணைந்து பயோ வார்?”.. ‘இந்தியா மற்றும் மேற்கு நாடுகள்தான் டார்கெட்டா?’.. கொரோனாவை மிஞ்சும் அடுத்த கட்ட நகர்வு?
- “இந்தியாவ நம்பி, போன வருஷம்தானே இத செஞ்சோம்!”.. டிக்டாக், ஹெலோ ஆப் தடை.. சீன நிறுவனத்துக்கு ஏற்பட்ட எழ முடியாத அடி!
- ராணுவ தளபதிகளுடன் அவசர அவசரமாய் லடாக் எல்லையில் இறங்கிய பிரதமர் மோடி!.. என்ன நடக்கிறது?
- ‘எங்க கிட்டயேவா!.. இப்போது பாருங்கள் எங்கள் ராஜதந்திரத்தை’.. 59 ஆப்கள் தடை விவகாரத்துக்கு.. சீனாவின் பதிலடி!
- ‘கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதா டிக்டாக்?’.. தடை உத்தரவுக்கு பின் டிக்டாக்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன?
- ‘ஆயுதங்களைத் தானே பயன்படுத்தக் கூடாது?’.. இந்திய எல்லையில் சீனாவின் மிரளவைக்கும் வியூகம்!
- சீன ஆப்களுக்கு வெச்சாச்சு ஆப்பு! டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் உட்பட 59 ஆப்கள் தடை! இந்தியா அதிரடி!
- "என்ன சார் சொல்றீங்க? எங்க வீரர்கள் 40 பேர் பலியா??!".. 1962ல் நடந்த மாதிரியே 'அந்தர் பல்டி அடித்ததா சீனா?'
- ‘நாட்டுக்காக நகையை கழற்றி கொடுத்தாங்க அம்மா’!.. துணை முதல்வர் சொன்ன ‘வரலாற்று’ சம்பவம்..!