'மாஸ்க், 'சானிடைசர்'லாம்... இனிமேல் அத்தியாவசியமான பொருள் கிடையாது...' ஏன் இந்த முடிவு...? - மத்திய அரசின் அதிரடி உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்களாக இருந்த முகக்கவசம், சானிடைசர் போன்றவை தற்போது அப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மார்ச் மாதம் இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது அதன் உச்ச நிலையாய் எட்டிவருகிறது எனலாம்.கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 3-ம் இடத்திற்கு சென்றுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட தொடக்கத்தில், அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த முகக்கவசம் (என்-95 முகக்கவசம், சர்ஜிகல் மாஸ்க்) மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் ஆகியவை சேர்க்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து சானிடைசர் மற்றும் முகக்கவசம் போன்றவைகளை அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-பிரிவிலிருந்து இந்த இருபொருட்களை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் முகக் கவசம், கைகளைச் சுத்தம் செய்யும் திரவம், கையுறை போன்றவற்றை பதுக்குவதோ, விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி அறிவிப்பதோ சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது
இந்தியாவில் தற்போது 7 லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருக்கும் இந்த சூழலில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலி்ல் இருந்து முகக்கவசம், சானிடைசர் இரு பொருட்களையும் நீக்கியதால், இனிமேல் இரு பொருட்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்ப ஏற்றுமதி செய்யவதில் தடை ஏதும் இருக்காது.
மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் பிடிஐ நிருபரிடம் கூறுகையில் 'தற்போது இந்தியாவில் தேவையான அளவு மாஸ்க்களும் சானிடைசர்களும் மக்களுக்கு கிடைக்கின்றன. அதுமட்டுமில்லாமல் 100 நாட்களுக்கும் மேலாக சானிடைசர், முகக்கவசம் ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. இனி அத்தியாவசிய பட்டியலில் அவை இருக்கப் போவதில்லை. இந்த முடிவை மத்தியஅரசு மாநில அரசுகளோடு கலந்து ஆலோசித்த பின்பு தான் எடுக்கப்பட்டது' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ’சானிடைசர் அடிக்க தான் வந்தாரு... ஆனா, அவர் இப்படி பண்ணுவாரு நினைக்கல...’ - தனியா இருந்த ‘மன நலம்’ பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம்!
- “கொரோனா பரவுர நேரத்துல.. இத சொன்னதுக்கு எச்சில் துப்புவாங்களா?”.. வைரலான பெண் செய்த காரியம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
- "மாஸ்க் போடலன்னா இதுதான் தண்டனை..." "பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு..." 'அதிபருக்கே' ஆட்டம் காட்டுன 'கோர்ட்...'
- கொரோனாவுக்கே 'ஷாக்' வைக்கும் 'மாஸ்க்...' 'வைரஸ்' பாதுகாப்பில் புதிய 'மைல் கல்...' 'இஸ்ரேல்' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'பொது முடக்கம், சமூக இடைவெளி இதெல்லால் செல்லாது... 'அறிகுறி இருக்கோ, இல்லையோ...' இதை 'கட்டாயம்' கடைபிடிங்க... இதுதான் 'பெஸ்ட்...'
- "மூன்று அடுக்கு முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்!".. ஏன்?.. உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு கருத்து!
- ‘அமெரிக்காவில்’ நடந்ததுபோல் இந்தியாவில்.. இளைஞர் ‘கழுத்தில்’ முட்டியால் அழுத்திய போலீஸ்.. என்ன நடந்தது..? அதிர்ச்சி வீடியோ..!
- 'தம்மாத்துண்டு மாஸ்க்... சும்மா நினைக்காதீங்க!'.. அபராதத்தில் அள்ளிக் குவித்த வாகன ஓட்டிகள்!.. சென்னையை அதிரவைத்த சம்பவம்!
- ‘வீட்டை எதிர்த்து கல்யாணம்’.. பாதுகாப்பு கேட்டு கோர்ட்டுக்கு போன ‘காதல் தம்பதி’.. விசாரணையில் எதிர்பாராம நடந்த ‘ட்விஸ்ட்’!
- Viral Video: 'சானிடைசர் தெளிச்சப்போ...' மளமளவென பற்றி எரிந்த பைக்... 'வைரலாகும் வீடியோ...'