'கடும் குளிர்... 'அந்த' விஷயத்துக்கு இது தான் சூப்பர் க்ளைமேட்!'.. 'அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க'!!!.. இளைஞர்களுக்கு செம்ம ஷாக்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இளைஞர்கள் மது அருந்த வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளும் பனிப்போர்வை போர்த்தியதுபோன்று காட்சியளிக்கிறது.
காலை வேளையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர்.
குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீமூட்டி குளிர்காய்கின்றனர். குளிர் தெரியாமல் இருக்க, மது பிரியர்கள் மது அருந்துவதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வட மாநிலங்களில் வரும் நாட்களில் குளிர் மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியிருப்பதாவது:-
டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வீடுகளிலேயே இருங்கள். வைட்டமின்-சி நிறைந்த பழங்களை உண்ணுங்கள். கடுமையான குளிர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்ள உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருங்கள்.
ஆல்கஹால் உடல் வெப்பத்தை மேலும் வெகுவாக குறைத்துவிடும் என்பதால் மது அருந்த வேண்டாம். வீடுகளிலோ அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ மது அருந்துவது நல்லதல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால இந்த பழக்கம் வெகுவா குறைஞ்சுடுச்சு'... 'கல்லூரி மாணவர்கள் குறித்த'... 'ஆய்வில் வெளியான ஆறுதல் தகவல்!!!'...
- 'தடுப்பூசி போட்டு 2 மாசத்துக்கு'... 'இந்த பழக்கம் மட்டும் கூடவே கூடாது?!!'... 'தடுப்புமருந்து போடத் தயாரான கையோடு'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!!!'...
- '48 மணி நேரமா ஒரே இடத்துல குத்த வெச்சு உக்காந்திருக்கும் புரேவி!'.. “என் அனுபவத்துல இப்படி பாத்ததே இல்ல!” - தமிழ்நாடு வெதர்மேன் ‘வெளியிட்ட’ முக்கிய தகவல்!
- போதும்டா சாமி.. 2020-ஐ கடக்குறதுக்குள்ள.... உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையத்தின் ‘அடுத்த’ அறிவிப்பு!
- 'தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்!!!'... 'புரெவி புயலால்'... 'எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை???'... 'வெளியாகியுள்ள எச்சரிக்கை!'...
- புரெவி புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது! 'மஞ்சள் அலெர்ட் விடுத்த வானிலை மையம்!'...
- ‘வாட்டி வதைக்கும் கடும் குளிர்’... ‘71 ஆண்டுகளுக்குப் பின்னர்’... ‘நவம்பர் மாதத்தில் திரும்பிய வரலாறு’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...!!!
- 'தென் தமிழகத்தை நெருங்கும்’... ‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி’... 'எங்கெல்லாம் மழை பெய்யும்?’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...!
- ‘புயலால் அதிக கனமழை பெய்து’... ‘ஏரிகள் நிரம்பியும், கை கொடுக்காமல்’... ‘இயல்பை விட குறைவு’... ‘வானிலை மையம் தகவல்’...!!!
- ‘நவம்பர் 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... ‘இந்தப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!