'அங்க விளையுற காய்கறி, பழங்களை சாப்பிடாதீங்க...' 'விஷ வாயுவோட பாதிப்பு ஒரு வருஷம் இருக்கும்...' அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியிட்ட நிபுணர் குழு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த வாரம் விசாகப்பட்டினத்திண் தொழிற்சாலையில் இருந்து கசிந்த நச்சு வாயுவின் விளைவால் இனி 1 ஆண்டுக்கு அப்பகுதியில் விளையும் காய் கறி பழ வகைகளை யாரும் உபயோகிக்க வேண்டாம் என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி அதிகாலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள எல்.ஜி பாலிமர் நிறுவனத்தில் இருந்து, ஸ்டைரின் என்ற விஷவாயு கசிந்தது. அதன் விளைவாக பல நூற்றுக்கணக்கான மக்கள் சாலையிலேயே மயங்கி விழுந்து கட்சிகளை நாம் அனைவரும் கண்டோம், இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் வெங்கடாபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நச்சு வாயுவின் தன்மை குறித்து ஆராய மத்திய அரசு, நிபுணர் குழுவை அனுப்பி அந்த கிராமங்களுக்கு அனுப்பிவைத்தது. விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண், தண்ணீர், மரக்கிளைகள், இலைகள், விதைகள் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்ததில் அவ்வூர் மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டது நிபுணர் குழு.

அதாவது இனி வரும் ஓராண்டுக்கு அப்பகுதியில் இருப்பவர்களை கண்டிப்பாக  மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட 5 கிராமங்களில் விளையக்கூடிய காய்கறி, பழங்கள், பால் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்தது. மேலும் அந்த பகுதியில் விளையும் தீவனங்களையும் கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். 

தற்போது சிறிது இயல்பு நிலைக்கு திரும்பும் மக்களை ஆந்திரா அரசு நேற்று முன்தினம் மாலை பொதுமக்களை மீண்டும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைத்தது. மேலும் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாநில அமைச்சர்கள் கண்ணபாபு, போச்சா  சத்தியநாராயணா,  அவந்தி சீனிவாஸ், தர்மானபிரசாத், எம்பி விஜய்சாய் ஆகியோர் இரவு பொதுமக்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு படுத்து உறங்கினர்.

அடுத்தகட்டமாக எல்ஜி பாலிமர் நிறுவனத்தில் மிச்சம் இருந்த 8 ஆயிரம் டன் ஸ்டைரின் ரசாயனம் எந்த காரணம் கொண்டும் விசாகப்பட்டினத்தில் இருக்கக்கூடாது, உடனடியாக அதை ஏற்றுமதி செய்யுங்கள் என முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டார். முதல்வரின் ஆணைக்கிணங்க 8 ஆயிரம் டன் ஸ்டைரினும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சிறப்பு கப்பல் மூலம் நேற்று இரவு தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என விசாகப்பட்டினம் கலெக்டர் வினய்சந்த் நேற்று அளித்த பேட்டியில் கூறினார். மீதியுள்ள 5000 டன் ஸ்டைரினை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்களிடம் நம்பிக்கை அளிக்கும்படி கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்