ஷேர் மார்க்கெட் முறைகேடு வழக்கு.. சித்ரா ராமகிருஷ்ணன் கைது.. சிபிஐ சொன்ன முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனுக்கு முன்ஜாமீன் தர டெல்லி நீதிமன்றம் மறுத்த நிலையில் நேற்று சிபிஐ அவரை டெல்லியில் வைத்து கைது செய்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
சித்ரா ராமகிருஷ்ணனை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. ஆனால், 7 நாட்கள் விசாரணைக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது நீதிமன்றம்.
2003 - 2006 ஆம் ஆண்டில் தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த போது, ஆனந்த் சுப்ரணியன் என்பவருக்கு விதிமுறைகளை மீறி பதவி வழங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக சித்ரா ராம கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டியது இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி.
அதுமட்டும் அல்லாமல் இமயமலையில் உள்ள சாமியார் ஒருவரின் முடிவுகளுக்கு ஏற்ப தேசிய பங்குச் சந்தையில் நடவடிக்கைள் எடுக்கப்பட்டதாகவும் பங்குச் சந்தை குறித்த ரகசிய தகவல்களை அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் சித்ரா ராம கிருஷ்ணன் ஏதும் கூறவில்லை என சிபிஐ தெரிவித்திருக்கிறது. இருப்பினும், இந்த வழக்கில் கடந்த மாதம் கைதான ஆனந்த் சுப்ரமணியனிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
கசிந்த தகவல்கள்
சிபிஐ விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து ஆனந்த் சுப்ரமணியனின் மின்னஞ்சலுக்கு பங்குச் சந்தை குறித்துப் பல முக்கியத் தரவுகளைப் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உலகளவில் மிகப்பெரிய பங்குச் சந்தையாக கருதப்படும் தேசிய பங்குச் சந்தையில் குளறுபடிகள் ஏற்ட்டுள்ளதாக செபி குற்றம் சாட்டிய நிலையில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் கைதாகி இருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சித்ரா வழக்கில் புதிய திருப்பம்.. இமயமலை சாமியார் யார் தெரியுமா? திகைத்துப்போன அதிகாரிகள்
- விஸ்வரூபம் எடுக்கும் சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம்.. ‘யார் அந்த மர்ம யோகி?’.. தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி தகவல்..!
- செபியின் ரகசியங்கள்.. இமயமலை சாமியாரிடம் பகிர்ந்த சித்ரா ராமகிருஷ்ணா.. சிக்கும் முன்னாள் சிஇஓ
- அரியலூர் மாணவி வழக்கு.. நீதியின் பக்கம் நின்ற உயர்நீதிமன்ற கிளைக்கு நன்றி.. அண்ணாமலை
- 'ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு'... 'முக்கிய சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன்'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மரணம்!
- 'ஐந்தரை லட்சம் பேஸ்புக் பயனாளர்களின் சுய விபரங்கள் திருட்டா?' .. ‘அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காக?’ .. ‘பிரபல’ கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்கு!
- சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த... 103 கிலோ தங்கம் மாயமானது எப்படி?.. சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
- கள்ள உறவை நேரில் கண்ட கன்னியாஸ்திரிக்கு நடந்த கொடுமை.. திடீர் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘திருடன்’.. சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
- 'கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு'... 'மர்மமும், திகிலுமாக கடந்து வந்த பாதை'... 28 வருடங்களுக்கு பிறகு வந்த பரபரப்பு தீர்ப்பு!
- ‘சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் புதிய தகவல்!’.. பரபரப்பை ஏற்படுத்திய சிபிஐ-யின் குற்றப்பத்திரிகை!