‘சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள’... ‘முன்னாள் முதல்வரின் மகன் திருமணம்’...'துணை முதல்வர் எச்சரிக்கை’!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா ஊரடங்கிறகு மத்தியில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனது மகன் திருமணத்தை உறவினர்களை கூட்டி, சமூக விலகலை கடைப்பிடிக்காமல் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு சமயத்தில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றை 20 பேர்களுக்கு மேல் கூடாமல் நடத்த வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ஒருவரின் பேத்தியான ரேவதியை இன்று திருமணம் செய்தார்.
கொரோனா பரவலால், பெங்களூரு சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், குமாரசாமி தனது சொந்த தொகுதியான ராமநகராவில் உள்ள பண்ணை வீட்டிற்கு திருமணத்தை மாற்றினார். அங்கு, உறவினர்கள் சூழ, சடங்கு சம்பிராதயங்களுடன் பண்ணை வீட்டில் நடந்த திருமணத்திலும், சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாதது திருமண புகைப்படங்களில் தெரிந்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் விழாவில் பங்கேற்ற யாரும் முகக்கவசங்களும் அணியவில்லை என்றும் தெரிகிறது.
இது பரபரப்பாக பேசப்பட்டநிலையில், இது குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாரயண் “குமாரசாமி வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என அறிவித்திருந்தார். அவர் நீண்ட காலமாக பொது வாழ்வில் உள்ளார். முதல்வராகவும் இருந்துள்ளார். நிகில் திருமணம் குறித்து ராம்நகர் இணைக் காவல் கண்காணிப்பாளரிடமிருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. குமாரசாமி வழிகாட்டுதல்களை பின்பற்றாதது தெரிந்தால், இரண்டாவது யோசனையின்றி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மெக்ஸிகோ பெண்ணை கரம் பிடிக்க... இரவில் திறக்கப்பட்ட நீதிமன்றம்!.. இளம் ஜோடியின் அசரவைக்கும் 'லவ்' டூயட்!
- ‘கொரோனா பயத்தால்’... ‘சூட்கேசுக்குள் நண்பனை வைத்து’... ‘வசமாக சிக்கிய மாணவன்’!
- 'மாஸ்க் அணிவதை டிக்டாக்கில் கிண்டல் செய்தவருக்கு கொரோனா...' 'வைரஸ் போகணும்னா கடவுள்கிட்ட கேளுங்க..' நம்ம எல்லாரையும் அவர் காப்பாத்துவார்...!
- கொரோனா 'உயிரிழப்பு' சதவிகிதத்தில்... மஹாராஷ்டிரா,'தமிழ்நாடை' பின்னுக்குத்தள்ளி... 'முதலிடம்' பிடித்த மாநிலம்!
- #WATCH #VIDEO: ‘டயாலிசிஸ் செய்த அம்மாவை காப்பாத்தணும்’... ‘ஊரடங்கால் மருந்து வாங்க முடியாமல் தவித்த இளம்பெண்’... ‘கண் கலங்க வைத்த சம்பவம்’!
- ‘நின்றுப்போன கல்யாண சோகத்திலும்’... ‘முகூர்த்த நேரத்தில்’... ‘ஊரடங்கால் தவித்த இளம்பெண்ணுக்காக’... ‘இளைஞர் செய்த உணர்வுப்பூர்வமான காரியம்’!
- ‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் ஒரே வழி’... ‘சீனா வுஹான் நகரத்தில் வாழும்’... ‘இந்திய விஞ்ஞானிகளின் வழிகாட்டல்கள்’!
- 'கொரோனாவ' கூட கட்டுப்படுத்திடலாம் போல... 'இத' கண்ட்ரோல் பண்ண முடிலயே... அதிரடியில் இறங்கிய போலீசார்!
- 'பக்கத்தில் நெருங்க முடியாத துயரம்'... கதறிய மகளைப் பார்த்து... கண்ணீர் விட்ட தாய்... ஃபோனில் அழைத்து முதல்வர் சொன்ன வார்த்தைகள்!
- ஆட்டுக்கு 'மணி' கட்டுறது விட 'மாஸ்க்' கட்டுறது தான் முக்கியம்...! புலிக்கு கொரோனா வந்த உடனே பதறிட்டேன், அதனால்தான்... ஆடுகள் மேல் கரிசனம் காட்டும் நபர்...!