அடுத்த 90 நாளுல... மாநிலம் ஃபுல்லா கொரோனா 'டெஸ்ட்' பண்ணிருக்கணும்... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த 'முதல்வர்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலம் தடப்பள்ளியிலுள்ள முகாம் அலுவலகத்தில் தொற்றுநோய் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது நாள்தோறும் சுமார் 24,000 பேர் வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்தனர்.
அதே போல கட்டுப்பாடு மண்டலங்களில் உள்ளவர்கள் மற்றும் அதிக ஆபத்து பிரிவில் உள்ளவர்கள் மீது தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் மேலும் மால்கள், கோயில்கள், நிறுவனங்கள் மற்றும் சந்தைகளில் மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்ட நபர்களுக்கு மருந்துகளை வழங்குவதுடன், பரிசோதனை முடிவுகளின் விவரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார அட்டைகளில் பதிவு செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தினார். சோதனை செய்ய வேண்டிய நபர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மண்டலம் ஒவ்வொன்றிற்கும் அவசர 104 ஊர்தி வாகனம் செயல்படுத்தி அனைத்து கிராமங்களிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். அதே நேரத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும், யாரிடம் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும், எங்கு அவர் பரிசோதனை செய்ய முடியும் என்பது பற்றியும் விரிவான தகவல்களை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நபர்களிடம் விளக்க வேண்டும் என்றார்.
அடுத்த 90 நாட்களுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், தொற்று ஏற்பட்டவர்களை களங்கப்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால வயசானவங்க தான் 'அதிகம் பாதிக்கப்படுறாங்க... ஆனா இந்த 'மாநிலத்துல' மட்டும் நெலம தலைகீழ!
- கொஞ்ச நாள் முன்னாடி தான் 'கொரோனா' இல்லன்னு சொன்னாங்க... ஆனா இப்போ 2 பேருக்கு வந்துருக்கு... 'அதிர்ச்சி'யில் உறைந்த 'நாடு'!
- தமிழகத்தின்... ஒரே 'பேருந்து' பணிமனையில்... 'ஐந்து' நடத்துனர்களுக்கு உறுதியான 'கொரோனா'!
- அதிகரிக்கும் 'கொரோனா' பாதிப்பு... '103 வயசுல' என்னால முடிஞ்ச 'உதவி'... உலககத்தையே திரும்பி பார்க்க வைத்த 'அசத்தல்' தாத்தா!
- 'தொடரும் ஊரடங்கு'... 'ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி'... 'இத நாங்க எதிர்பாக்கவே இல்ல'... வியந்து போன மக்கள்!
- 'கல்யாணம்' முடிஞ்ச கையோட... 'மாப்பிள்ளையை' அழைத்துச் சென்ற 'அதிகாரிகள்'... 'பரிசோதனை' முடிவால் பிரிந்த 'புது ஜோடி'!
- கொரோனா 'கன்ஃபார்ம்' ஆன ஒரே நாளுல... 'இளம்' ஊடகவியலாளருக்கு நேர்ந்த 'துயரம்'... 'அதிர்ச்சி'யை ஏற்படுத்திய 'முடிவு'!
- "ஓ... இந்த ஏரியா பக்கம் வர பயமா?..." 'வெளியானது' கொரோனாவின் 'வீக்னெஸ்...' "இவ்வளவு நாளா தெரியாம போச்சே..."
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'தமிழக' எம்.எல்.ஏ... 'உடல்நிலை' கவலைக்கிடம்... 'மருத்துவமனை' வெளியிட்ட தகவல்!
- தமிழகத்தில் அதிரவைத்த 'கொரோனா' பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... 'ஒரே' நாளில் '12 பேர்' பலி... முழு விவரம் உள்ளே!