‘ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம்!’.. ‘காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால்’ பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் இன்று முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி. 

நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக நாடு முழுவதும் இன்று (மார்ச் 24) முதல் அடுத்த 21 நாட்களுக்கு முடக்கப்படுவதாகவும், நாட்டை காக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் இந்த ஊரடங்குக்குள் கொண்டுவரப்படும் என்றும், தனக்கு ஒவ்வொரு இந்தியரும் முக்கியம் என்று கூறிய பிரதமர், காட்டுத்தீயாக பரவி வரும் கொரோனாவின் சங்கிலித் தொடரை உடைத்தாக வேண்டும் என்றும் சுயக்கட்டுப்பாடு இல்லை என்றால் இந்தியா அழிவைச் சந்திக்கும் என்றும் ஒவ்வொரு கிராமத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு நாட்டு மக்கள் இந்த ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “21 நாட்கள் ஊரடங்கை பின்பற்றாவிட்டால், 21 ஆண்டுகள் பின்னோக்கி  செல்வோம்” என்று கூறிய பிரதமர் மோடி கையெடுத்துக் கும்பிட்டு கேட்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் ‘உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் வெளியே சென்றால் கொரோனா உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும்’ என்று பேசிய பிரதமர் உறவினர்கள், வெளியாட்கள் உட்பட யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும்  வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ஏற்பட்டால் தானாகவே மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்த மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார். 

அதே சமயம் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ரயில் சேவை ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NARENDRAMODI, CURFEW, CORONAVIRUSLOCKDOWN, INDIAFIGHTSCORONA, STAYHOMEINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்