'ஸ்டுடென்ட்ஸ் ரெடியா இருங்க'... 'என்ஜினீயரிங் கல்லூரிகளை எப்போது தொடங்கலாம்'... ஏஐசிடிஇ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொறியியல் படிப்புகளுக்கான வகுப்புகளை எப்போது தொடங்கலாம் என்பது குறித்த அறிவிப்பை இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான காலம் ஏற்கெனவே கடந்து விட்ட நிலையில், கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தநிலையில் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் நடத்திய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளுக்கான வகுப்புகள் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி முதல் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விரிவான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-தேதிக்குள் வழங்கவேண்டும்.

பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றை ஆகஸ்டு 30-தேதிக்குள் முடிக்க வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு என்பது செப்டம்பர் 10-தேதிக்குள் முடிக்க வேண்டும். காலியாக இருக்கும் இடங்களுக்கான  மாணவர் சேர்க்கையைச் செப்டம்பர் 15-தேதிக்குள்  முடிக்க வேண்டும். ஏற்கனவே பொறியியல் படித்து வரும் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்.

புதிதாக பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான வகுப்புகளைச் செப்டம்பர் 15-ந்தேதி முதல் ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கல்விக்காலம் என்பது ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை இருக்கும்.

இதனிடையே அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒருவாரத்தில் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்