'கொரோனா தாக்கம்...' 'ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்...' '2021ம் ஆண்டு நடக்கப் போவது என்ன?...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தாக்கம் அதிகரித்துவரும் வேளையில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் வேலையிலிருந்து நீக்கி வருகின்றன. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது, ஒப்பந்த அடிப்படியில் வேலைக்குச் சேர்ந்த ஊழியர்களே ஆவர்.
கொரோனா தாக்கத்தால் பலத்த சரிவு கண்டிருக்கும் துறைகளில் முக்கியமானது மார்கெட்டிங் துறை. இதில் வேலை செய்த பலர் வெளி வேலைகளில் ஈடுபட்டு இருப்பதால் இவர்களது வேலை பறிபோயுள்ளது.
புக் மை ஷோ, ஓயோ, உடான் உள்ளிட்ட நிறுவனங்கள் அதீத ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. பல நிறுவனங்களில் நிர்வாகிகள் வேலை பறிபோகாது என சில மாதங்களுக்கு முன்னர் ஊழியர்களுக்கு உறுதி அளித்து விட்டு பின்னர் வேலையை ராஜினாமா செய்ய உத்தரவிடுகின்றன.
கொரோனா முடிவுக்கு வந்ததும் பல ஆன்லைன் வர்த்தக, இடைத்தரகு நிறுவனங்கள் பலத்த நஷ்டம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டு பலர் தங்கள் துறையில் வாய்ப்பில்லாமல் வேறு துறையை தேர்ந்தெடுத்து வேலை செய்யும் அபாயத்துக்குத் தள்ளப்பட உள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பலர் பாதி சம்பளத்துக்கு வீட்டில் இருந்து வேலை செய்து வரும் நிலையில் ரியல் எஸ்டேட், காப்பீடு, ஆன்லைன் மார்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த துறையில் தங்களது முன் அனுபவத்தை வைத்து மீண்டும் வேலைக்கு சேர்ந்து மேல் எழுவது மிகக் கடினம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிவிகோ, ஓலா, பேடியம், குவிக்கர், ஜொமேட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டே தங்களது ஆரம்ப ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நிறுத்தியது.
தற்போது பல கோடி கடனில் மூழ்கியுள்ள ஆன்லைன் நிறுவனங்கள் பழைய நிலைக்கு வர பல மாதங்கள் பிடிக்கும். அதுவரை இந்த நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பு வகித்த பலர் வேலையின்மையால் அவதிப்படுவர் எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பசி’ கொரோனாவை விட கொடியது.. ‘இத என் கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி’.. முதல்வர் எடுத்த அதிரடி..!
- 'ஒரு பக்கம் ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா'... 'அமெரிக்காவை சுழற்றிய அடுத்த பயங்கரம்'... 7 பேர் பலியான பரிதாபம்!
- கொரோனா தொற்றால் பலியான ‘4 மாத குழந்தையின்’ இறுதிச்சடங்கு.. நெஞ்சை ‘ரணமாக்கிய’ போட்டோ..!
- 2 மூட்டை 'அரிசியுடன்' சென்னை டூ ஆந்திரா... 'இந்திய' கடற்படை கண்ணில் சிக்காமல்... 1000 கி.மீ கடலில் 'பயணித்து' மிரளவைத்த தொழிலாளர்கள்!
- 'கண்' தெரியாமல் தஞ்சமடைந்த 'காட்டுமாடு'... கொரோனாவிற்கு மத்தியிலும் 'இளைஞர்கள்' செய்த காரியம்!
- 'ஆர்டர்' பண்ணுங்க... 'ஆவின் பால்', ஐஸ்கிரீம், தயிர்... அத்தனையும் உங்க 'வீடு' தேடிவரும்!
- 'இருக்குற' நோயையே 'சமாளிக்க' முடில... அதுக்குள்ள 'இந்த' நோயும் வந்திருச்சு... 'இரட்டை' தாக்குதலில் சிக்கிய நாடு!
- நாட்டிலேயே 'இந்த' 5 நகரங்களில் தான்... 'கொரோனா' பரவல் அதிகம்: உள்துறை அமைச்சகம்
- “கொரோனா பர்கர்!”.. “பீட்சா.. டோப்பிங்ஸ்க்கு பிளாக் ஷூ பாலிஷ்”.. ஜொமாட்டோவின் கேள்விக்கு குவிந்த “வைரல்” பதில்கள்!
- ‘கடைகள் மூடியிருந்தால் என்ன?’... ‘ஊரடங்கில் சாஃப்ட்வேர் பிரச்சனைகளுக்கு’... ‘இலவசமாக உதவ முன்வந்த பிரபல நிறுவனங்கள்’!