'அடுத்த தடுப்பூசியும் வந்தாச்சு!'... “ரிஸ்க்கை விட, பயன்கள் அதிகம்” - ஆலோசனைக்குழு அளித்த அறிக்கை .. எகிறும் எதிர்பார்ப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் அனைத்து சோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இங்கிலாந்து, கனடா நாடுகளை பொருத்தவரை, ஃபைசர் தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, ஃபைசர் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடர்னா தடுப்பூசியும் மிக விரைவில் கனடாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் ஆலோசனைக் குழு எமர்ஜென்சி பயன்பாட்டுக்கு மாடர்னா தடுப்பூசியை அனுமதிக்கும்படி பரிந்துரைத்துள்ளது.

இதில் மாடர்னா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கலாமா என்று ஆலோசனைக் குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இதனை அனுமதிக்கும்படி 20 பேர் வாக்களித்தனர்.  மாடர்னா தடுப்பூசியால் 18 வயதுக்கு மேலானோருக்கு உண்டாகும் ரிஸ்க்கை விட, பயன்கள் அதிகம் என்று ஆலோசனைக் குழு தெரிவித்தது. இதனை அடுத்து முதற்கட்டமாக மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் மாடர்னா தடுப்பூசியை எமர்ஜென்சிக்கு பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைக்கும் என தெரிகிறது.

இதனிடையே முதற்கட்டமாக மாடர்னா நிறுவனத்திடம் இருந்து, 10 கோடி தடுப்பூசிகளை  கொள்முதல் செய்ய அமெரிக்க அரசு 150 கோடி டாலருக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதுடன், ஃபைசர் தடுப்பூசியை விடவும், மாடர்னாவுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தவிர, ஃபைசர் தடுப்பூசி கடும் குளிரில் சேமித்து வைக்கப்பட வேண்டிய ஒன்று, நிறையவே இதற்காக செலவாகலாம். மாடர்னா தடுப்பூசிக்கு இந்த சிக்கல் இலை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்