'என்னோட 'குட்டியவா அட்டாக்' பண்றீங்க'?...இளைஞருக்கு நிகழ்ந்த 'பரிதாபம்' ...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது குட்டியின் மீது கலெறிந்தவர்களை துரத்தியதில்,இளைஞர் ஒருவர் யானையிடம் மிதி பட்டு இறந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் மெடினிபூர் என்ற மாவட்டத்தில் உள்ளது அஜ்னசுலி என்ற கிராமம்.இது காட்டுப்பகுதிக்கு அருகில் இருப்பதால் அவ்வப்போது யானைகள் இந்த பகுதிக்கு வருவது வழக்கம்.அந்த வகையில் அந்த கிராமத்தின் வறண்ட ஏரியில் கடந்த வெள்ளிக் கிழமை யானை ஒன்று குட்டி போட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதனை பார்த்துள்ளார்கள்.வேடிக்கை பார்த்ததோடு அதனை வீடியோ மற்றும் செல்ஃபியும் எடுத்துள்ளார்கள்.

இதனிடையே பிறந்த குட்டி யானையின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அதனால் எழுந்து நிற்க முடியவில்லை.இதனால் குட்டி யானையை காட்டிற்குள் அழைத்து செல்ல தாய் யானை மிகவும் சிரமப்பட்டது.இந்நிலையில் யானையை காண்பதற்கு மக்கள் கூட்டம் அதிகரிக்க  அதனால் தனது குட்டிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சிய தாய் யானை  'ஏரியில் இருந்த மண்ணைக் கிளறிவிட்டு, யாரும் எங்களது அருகில் வர வேண்டாம் என எச்சரிக்கை செய்தது.அதோடு தனது குட்டி யானையை எழுந்து நிற்க வைக்க பல முயற்சிகளையும் எடுத்து வந்தது.

இந்நிலையில் திடீரென கூட்டத்தில் இருந்த சிலர் யானை குட்டியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.இதனால் கடும் கோபமடைந்த தாய் யானை மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடி வந்தது.அப்போது கூட்டத்தில் இருந்த ஷைலன் மஹடோ என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக யானையிடம் சிக்கினார்.அப்போது தாய் யானை மிதித்ததில் இளைஞர் உயிரிழந்தார்.இதனிடையே காட்டிற்குள் இருந்து வந்த 10 யானைகள் ஏரியில் இருந்த தாய் மற்றும் குட்டி யானைக்கு பாதுகாப்பு அளித்தது. அப்போது அதிலிருந்த 3 யானைகள் கூட்டத்தில் இருந்த மக்களை விரட்டி அடித்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த வனத்துறை அதிகாரிகள்,ஏரிக்கு விரைந்து வந்து அங்கிருந்த மக்களை அப்புறபடுத்தினார்கள்.மேற்கொண்டு யாரும் ஏரிக்கு அருகில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே தாய் யானை மிகவும் கோபமாக இருப்பதால்,வனத்துறையினரும் யானையின் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாய் யானை சற்று அமைதியான பிறகு தான் யானையின் அருகில் செல்ல முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதனிடையே தன் குட்டியைப் பாதுகாக்கும் தாய் யானையின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

ELEPHANT, AJNASHULI, PELTED WITH STONES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்