'வாடா ராசா வா, உன்ன அப்படியே விட்டுற மாட்டோம்'... 'ஜே.சி.பி மூலம் மீட்கப்பட்ட யானை'... 'மேலே வந்ததும் கொடுத்த ரியாக்ஷன்'... இணையத்தை தெறிக்க விடும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பள்ளத்தில் விழுந்த யானையை ஜே.சி.பி எந்திரம் மூலம் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த உலகம் என்பது மனிதர்களுக்கானது மட்டும் அல்ல என்பதே நிதர்சனம். அந்த வகையில் கர்நாடக மாநிலம் கூர்க்கில் பள்ளத்தில் விழுந்த யானை காப்பாற்றப்பட்டுள்ளது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூர்க் பகுதியில் சுற்றித் திரிந்த யானை ஒன்று பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து விட்டது.

இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஜே.சி.பி எந்திரத்தை வைத்து யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, யானை கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பள்ளத்திலிருந்து மேலே வந்தது.

மேலே வந்த மகிழ்ச்சியில் அது காட்டிற்குள் உடனே செல்லாமல் ஜே.சி.பி இயந்திரத்தை வந்து மோதியது. பின்னர் அங்கிருந்த வனத்துறையினர் சப்தம் எழுப்பி யானையைக் காட்டிற்குள் அனுப்பி வைத்தனர். யானையும் மேலே வந்து உயிர் தப்பிய மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து காட்டை நோக்கி ஓடியது. அதன் துள்ளல் ஓட்டம் காப்பாற்றியவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இந்த வீடியோ தங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்