Video: ‘கனமழையால் சகதியான கிணறு’... ‘ஒரு நொடியில்’... ‘தவறி விழுந்து தவித்த யானை’... வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகனமழை காரணமாக, சேறும் சகதியுமான கிணற்றில் யானை ஒன்று விழுந்து போராடிய சம்பவம் பார்ப்பர்களை கவலையடைய செய்தது.
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல இடங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள சுந்தர்ஹர் மாவட்டத்தில், துமர்ட்டா கிராமத்தின் அருகே, சுமார் 18 யானைகள் ஒன்றாக வந்தன. அப்போது கூட்டமாக கிராமத்திற்குள் நுழைய வந்த யானைகளை கிராம மக்கள் விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பெண் யானை ஒன்று, சேறும் சகதியுமான கிணற்றில் விழுந்து பல மணிநேரம் உயிருக்கு போராடியது.
யானை சகதியில் மாட்டிக்கொண்டதால் எழுந்துவர முடியாமல், பிளிறிய சத்தம் அங்கிருந்த மக்களை கவலைகொள்ள செய்தது. இதையடுத்து கிராம மக்கள் தீயணப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் அங்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் யானையை மீட்க போராடினார்.
ஆனால் சேறும், சகதியுமாக இருந்ததால் ஜேசிபி இயந்திரங்கள் அப்பகுதிக்கு கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தும் பெரிய கயிறுகள் மூலம், கவிழ்ந்து கிடந்த, சுமார் 2 மணி நேரம் போராடி யானையை மீட்டனர். உயிருடன் மீண்ட யானை பிளிறியபடி காட்டுக்குள் தெறித்து ஓடியது அங்கிருந்தவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மேய்ச்சலுக்கு வந்த யானை’.. ‘எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம்’.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..!
- ‘ஒய் திஸ் கொலவெறி’.. ‘திடீரென ஆக்ரோஷமான யானை’ வைரல் வீடியோ..!
- 'நீர் வீழ்ச்சியில் சிக்கி'.. 'அடுத்தடுத்து உயிரிழந்த 11 யானைகள்'.. 'நெஞ்சை பிழிந்த பிளிறல் சத்தம்'!
- 'மூழ்கிய' குட்டி..காப்பாற்ற சென்ற யானைகள்..அடுத்தடுத்து 'நேர்ந்த' பரிதாபம்!
- ‘ரயில் தண்டவாளத்தை கடந்தபோது’... ‘மோசமாக அடிபட்ட யானை உயிரிழப்பு’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்'!
- 'எதிரே வந்த ரயில்'...'தண்டவாளத்தை கடந்த யானை'...ஒரே செகண்ட் தான்'...மனதை ரணமாக்கும் வீடியோ!
- ‘எலும்பும் தோலுமாக’.. ‘உலகை அதிர வைத்த’.. ‘டிக்கிரி யானை உயிரிழப்பு’..
- 'இதயங்களை வென்ற குட்டி யானை'.. 'அதன் க்யூட்டான செயலுக்கு'.. குவியும் பாராட்டுக்கள்.. வீடியோ!
- ‘கதவை உடைத்துக்கொண்டு நுழையும் காட்டு யானை’.. 2 பேர் பலி..! பீதியில் கோவை மக்கள்..!
- ‘புகழ்பெற்ற திருவிழாவின் இன்னொரு முகம்’.. ‘வெளியான அதிர வைக்கும் புகைப்படத்தால்..’ வலுக்கும் கண்டனம்..