அதிகாலைல ஏற்பட்ட கரண்ட் கட்... உடனே டிரான்ஸ்பார்ம் மேலே ஏறிய ஊழியர்.. படார்னு கேட்ட சத்தத்தால் அதிர்ந்துபோன கிராம மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீஹார் மாநிலத்தில் டிரான்ஸ்பார்ம் மீது ஏறி வேலை செய்துகொண்டிருந்த ஊழியர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அது பக்கத்துல போனா ஒரு செகண்ட்ல நம்ம கதை முடிஞ்சிடும்".. செங்கடலில் இருக்கும் ஆபத்தான பகுதி.. அதிர வைக்கும் ரிப்போர்ட்..!

பீஹார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ளது நாட் டோலா கிராமம். இங்கு கடந்த வியாழக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனே, அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியரான அஜித் குமார் பாண்டேவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில நிமிடங்களில் மின்வெட்டு ஏற்பட்ட இடத்துக்கு சென்ற அவர், அங்கிருந்த டிரான்ஸ்பார்ம் மீது ஏறி பழுதுபார்க்க முடிவெடுத்திருக்கிறார்.

அதிர்ச்சி

அதன்பிறகு அஜித் குமார் அங்கிருந்த டிரான்ஸ்பார்ம் மீது ஏறுவதற்கு முன்னர் மின்சாரம் இருக்கிறதா என்பதை சரி பார்த்திருக்கிறார். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பிறகே அவர் மேலே ஏறியிருக்கிறார். ஆனால், யாரோ ஒருவர் டிரான்ஸ்பார்மரை ஆன் செய்ததாக தெரிகிறது. இதனால், மின்சாரம் தாக்கி அங்கேயே அஜித் குமார் உயிரிழந்திருக்கிறார். அப்போது சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்த கிராமத்தினர் நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி பேசிய அந்த கிராமத்தை சேர்ந்த ராகேஷ் குமார்,"கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் டெக்னீஷியன் காலை 5.30 மணிக்கு வந்தார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பழுதை சரிசெய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறினார். அப்போது திடீரென யாரோ டிரான்ஸ்பார்மரை ஆன் செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக டெக்னீஷியன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்" என்றார்.

சந்தேகம்

அதே கிராமத்தை சேர்ந்த ஷ்ரவன் குமார் பாண்டே இதுகுறித்து பேசுகையில்,"மின்சாரம் துண்டிக்கப்பட்டதை உறுதி செய்தபிறகே அவர் டிரான்ஸ்பார்ம் மேலே ஏறினார். ஆனால், யாரோ வேண்டுமென்றே அதனை ஆன் செய்தது போல இருக்கிறது. அவரை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால், அவர் டிரான்ஸ்பார்ம் மீதே மரணமடைந்துவிட்டார்" என்றார் சோகமாக.

இந்நிலையில், அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

Also Read | "இந்த தருணத்துக்காக பல வருஷம் காத்திருந்தேன்".. அம்மா, அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

BIHAR, ELECTRICIAN, REPAIRING TRANSFORMER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்