நடுரோட்டில் குப்பென தீ பிடித்த எலெக்ட்ரிக் பைக்… தெறித்து ஓடிய மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹாராஷ்ரா மாநிலத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த எலெக்ட்ரிக் பைக் திடீரென தீ பிடித்து எரிந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
தொடர்ந்து தீ பிடிக்கும் எலெக்ட்ரிக் பைக்குகள்..
இரண்டு நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அல்லாபுரம் பகுதியில் சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்த எலெக்டிரிக் பைக் திடீரென தீ விபத்துக்குள்ளான செய்தி நம்மை பதற வைத்ததை மறந்திருக்கமாட்டோம்.
வேலூர் மாவட்டம் அல்லாபுரம் சாலையில் துரைவர்மா என்பவர் ஃபோட்டோ ஸ்டூடியோ ஒன்றை வைத்து வந்தார். அவருக்கு 13 வயது மகளும் இருந்தார். இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இரு சக்கர வாகன நிலையம் ஒன்றிலிருந்து எலெக்ட்ரிக் பைக் ஒன்றை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் இரவு எலெக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எலெக்ட்ரிக் பைக் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. அதற்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த ஒரு பெட்ரோல் பைக்கும் தீ பிடித்து எரிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில வினாடிகளிலேயே தீ வீடு முழுக்கவும் பரவியுள்ளது. தூங்கிக்கொண்டிருந்த துரைவர்மாவும் அவரது 13 வயது மகளும் தீயில் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ரோட்டில் தீ பிடித்த எலெக்ட்ரிக் பைக்..
வேலூர் சம்பவம் மக்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் அது போல் ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. ரோட்டில் நின்று கொண்டிருந்த எலெக்ட்ரிக் பைக் ஒன்று திடீரென தானாக தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை அங்கிருந்த நபர் ஒருவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சூடுபிடிக்கும் எலெக்ட்ரிக் பைக் வியாபாரம்..
வாகனப்புகை காரணமாக காற்று மாசு அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் எலெக்ட்ரிக் பைக்குகள் அறிமுகமாகின. மேலும் எரிவாயு விலையேற்றத்தால் அவதிப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இது மகிழ்வை தந்தது. பலரும் எலெக்ட்ரிக் பைக் வாங்க முன்வருவதால் எலெக்ட்ரிக் பைக் விநியோகம் சூடு பிடித்தது. மக்களை ஈர்க்கும் வகையில் புது புது மாடல்கள் வருவதாலும் மக்களை இது வெகு அளவு ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் நடந்த இச்சம்பவம் எலெக்ட்ரிக் பைக் வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த பீதியால் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். ஏற்கனவே எலெக்ட்ரிக் பைக்குகளில் தானாகவே பல சேதங்கள் ஏற்படுவதாக வாடிக்கையாளர்களிடம் குற்றச்சாட்டுகள் பல நாட்களாகவே எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்ன நம்ம பேங்க் அக்கவுண்ட்ல ரூ.15 லட்சம் வந்திருக்கு.. சந்தோஷத்தில் புது வீடு கட்டிய விவசாயி.. 6 மாசம் கழிச்சு வந்த அதிர்ச்சி தகவல்..!
- என்ஜினியரே.. உங்க வீட்ல யாராவது ஒருத்தர் சாக போறாங்க.. ஆன்லைனில் வந்து சொன்ன பெண் ஜோதிடர்.. இப்படி ஒரு திட்டமா?
- காதலியோடு அறை எடுத்து தங்கியிருந்த கணவன்.. ஹோட்டலுக்கு போன் போட்ட மனைவி.. ஊழியர்கள் சொன்ன தகவலை கேட்டு உச்சக்கட்ட அதிர்ச்சி
- முன்னாள் காதலிக்கு காதலன் உருவாக்கிய பேக் ஐடி.. நண்பரை வைத்து காதலி செய்த சதி திட்டம்!
- கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பாக்காம.. முடிய புடிச்சு இழுத்து அடிச்சுருக்காங்க.. வனத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடுமை
- 80 வயதில் தந்தைக்கு வந்த கல்யாண ஆசை.. கடுப்பான மகன் - சோகத்தில் முடிந்த விபரீத சம்பவம்..!
- பக்கா ஸ்கெட்ச்... பக்கத்து வீடுகளுக்கு பூட்டு... ஏடிஎம்-ஐ ஆட்டையை போட பலே காரியம்!
- குட்டியின் மரணம்... பழிக்குப் பழி வாங்கும் குரங்குகள் கூட்டம்!- ஒரே ஊரில் சுமார் 250 நாய்க்குட்டிகள் பலி..!
- VIDEO: 'ஆளு வயசானவங்க மாதிரி தெரியுது...' 'ஈஸியா அட்டேக் பண்ணிடலாம்னு நினச்ச...' 'சிறுத்தைக்கு கெடச்ச ஷாக்...' 'கெத்து காட்டிய பாட்டி...' - வைரல் வீடியோ...!
- கேரளாவை தொடர்ந்து ‘மற்றொரு’ மாநிலத்தில் பரவிய ஜிகா வைரஸ்.. உடனே சுகாதார குழுவை அனுப்பிய மத்திய அரசு..!