நடுராத்திரில அப்பார்ட்மெண்ட்டே அதிரும்படி கேட்ட சத்தம்.. காலைல வயதான தம்பதியின் வீட்டுக்குள்ள போனவர் கண்ட காட்சி.. குழப்பத்தில் போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொல்கத்தாவில் வயதான தம்பதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தையே பதற்றமடைய வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கேன்சர் நோயாளிகளை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து.. வரலாற்றிலேயே முதல்முறையாக சாதனை படைத்த மருத்துவர்கள்.. முழுவிபரம்..!

திடீர்னு கேட்ட சத்தம்

மேற்குவங்க மாநிலத்தின் பாபானிபூர் பகுதி பாதுகாப்பு நிறைந்த இடமாகும். ஏனெனில் அங்குதான் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜியின் இல்லம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் சில தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து அடுத்தநாள் காலை அந்த அப்பார்ட்மென்டில் வயதான தம்பதி ஒன்று கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

விசாரணை

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர், அப்பார்ட்மென்டில் மரணமடைந்திருந்த தம்பதியின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உயிரிழந்தது 60 வயதான அசோக் ஷா மற்றும் அவரது மனைவி ரேஷ்மி ஷா (55) என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மேலும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக தம்பதியினர் கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அண்டை வீட்டார்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வீட்டை வாங்க இருந்த நபரிடம் தம்பதி சில தினங்களுக்கு முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

நல்லா பழக்கமானவங்க தான்..

கொல்கத்தா அப்பார்ட்மென்டில் கொலை செய்யப்பட்ட வயதான தம்பதி குறித்து விசாரணையில் ஈடுபட்டுவந்த காவல்துறை அதிகாரி," தம்பதிக்கு நன்கு பழக்கமானவர்கள் தான் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். சூழலை ஆய்வு செய்கையில் கொலையாளி வந்த போது ரேஷ்மா தான் கதவை திறந்திருப்பார் என கருதுகிறோம். அவருக்கு தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வீட்டில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். தம்பதியின் கட்டிலருகே தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது" என்றார்.

சம்பவ இடத்தை மாநகர மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் கொல்கத்தா காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். உயிரிழந்த தம்பதியின் போன்கால்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தின் முக்கிய பகுதியில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Also Read | "நேரத்தை எப்படி Usefull-ஆ பயன்படுத்துறது?"..நெட்டிசனின் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா சொன்ன பலே பதில்.. வைரல் ட்வீட்..!

KOLKATA, APARTMENT, ELDER COUPLE, கொல்கத்தா, அப்பார்ட்மென்ட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்