"ஆட்டோ ஓட்டுநர் TO முதலமைச்சர்".. மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வரான ஏக்நாத் சிங்.. யார் இவர்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடே மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியல் நிலவரத்தை ஆர்வத்துடன் கவனித்து வருகிறது. பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் முதலமைச்சராக பதிவியேற்றுள்ளார் ஏக்நாத் ஷிண்டே.

Advertising
>
Advertising

Also Read | தல தோனிக்கு சிகிச்சை அளிக்கும் நாட்டு வைத்தியர்.. என்னப்பா ஆச்சு?

கடந்த சில வாரங்களாகவே இந்திய ஊடங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் ஏக்நாத் ஷிண்டே.  1964 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள சத்தாரா பகுதியில் பிறந்த இவர் மும்பையில் உள்ள தானே பகுதியில் தான் வளர்ந்தார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்திருக்கின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக 11 ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஏக்நாத் ஷிண்டே, தானேவில் ஆட்டோ ஓட்டி அதன்மூலம் தனது குடும்பத்தினருக்கு உதவி வந்திருக்கிறார்.

ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் அதாவது 1980 களில் சிவசேனா தலைவர் பால் தாக்ரேவின் கொள்கைகள் மீது ஷிண்டேவிற்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் தான் `தானே’ மாவட்ட சிவசேனா தலைவராக இருந்த ஆனந்த் திகேவின் அறிமுகம் ஷிண்டேவிற்கு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கட்சி பணியில் இறங்கிய ஷிண்டே தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார். 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற தானே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட ஷிண்டே அதில் வெற்றியும் பெற்றார்.

வெற்றிகள்

அதனை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் கோப்ரி - பக்பகாடி தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷிண்டே. அதைத் தொடர்ந்து  2009, 2014. 2019 ஆண்டு சட்டமன்ற தேர்தலிகளிலும் அவர் வெற்றியை ருசித்தார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பொதுப்பணித்துறை அமைச்சராகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இதனிடையே சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் 2014 ஆம் ஆண்டு செயலாற்றினார் ஷிண்டே. இதன்மூலம் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராக உயர்ந்தார்.

கசப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்திருந்தது. இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் பதவி யாருக்கு? என்பதில் சிக்கல்கள் எழுந்தன. உத்தவ் தாக்ரேவின் முதல்வர் கோரிக்கையை பாஜக நிராகரித்தது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் துணையுடன் உத்தவ் தாக்ரே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.

இந்த முடிவில் ஏக்நாத் ஷிண்டேவிற்கு அதிருப்தி இருந்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து பாஜக மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சி ஆனது. சமீபத்தில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டினார் ஷிண்டே. இதனால் பெரும்பான்மையை இழந்த உத்தவ்தாக்ரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தின் 20வது முதலமைச்சராக  பொறுப்பேற்றுள்ளார் ஏக்நாத் ஷிண்டே.

பரபரப்பான சூழ்நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஏர்போர்ட் பாத்ரூமில் நாய்க்குட்டி.. கூடவே இருந்த லெட்டர்.. படிச்சு பாத்துட்டு கண்கலங்கிய அதிகாரிகள்..!

MAHARASHTRA, EKNATH SHINDE, MAHARASHTRA NEW CM EKNATH SHINDE, மகாராஷ்டிரா, ஏக்நாத் சிங்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்