‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு, ஜன்னல்’.. 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரிசார்ட் ஒன்றின் அறையில் எரிவாயு கசிந்து 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 சுற்றுலா பயணிகள் நேபாள நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு சென்றனர். நேற்றிரவு மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் தங்கினர். இதில் ஒரு அறையில் 8 பேரும், மற்றொரு அறையில் 7 பேரும் தங்கியுள்ளனர்.

குளிர் பிரதேசங்களில் உள்ள விடுதிகளில் அறையை வெதுவெதுப்பாக்க கேஸ் ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவர்கள் தங்கிருந்த அறையின் கதவு, ஜன்னல் அனைத்தும் உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. அப்போது கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் அனைவரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ரிசார்ட் ஊழியர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

KERALA, KILLED, ACCIDENT, TOURISTS, NEPAL, HOTEL, KIDS, DIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்