'இந்த கிளாஸ் வரை ஹோம் ஒர்க் கொடுக்கக் கூடாது’... ‘மாணவர்களின் சுமையை குறைக்க’... ‘வெளியான மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள்’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பள்ளி மாணவர்களின் புத்தக சுமை மற்றும் வீட்டு பாடத்தை குறைக்க மத்திய கல்வி அமைச்சகம் புதிய கொள்கையை வகுத்துள்ளது.

பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட புத்தக பையை தினமும் தூக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதனால் மாணவர்களின் உடல்நலமும் மன நலமும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மையமாகக் கொண்டு, மத்திய கல்வி அமைச்சகம், 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி பை கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி,

* புத்தகப்பையின் எடையை சீராக கண்காணிக்க வேண்டும்

* ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன்மீது குறிப்பிடப்பட வேண்டும்

* பள்ளிப் பைகளின் அதிகபட்ச எடை மாணவரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் பள்ளிப் பை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* பள்ளிகளில் லாக்கர்கள், பையின் எடையை சரிபார்க்க டிஜிட்டல் எடை இயந்திரம் இருக்க வேண்டும்.

* மாணவர்கள் சக்கர கேரியர் அல்லது டிராலி பேக் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும்.

* இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது.

* 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 மணிநேரம் மட்டும் வீட்டுப்பாடம் தரவேண்டும்.

* 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாளைக்கு அதிகபட்சமாக ஒருமணி நேரம் வீட்டுப் பாடம் தர வேண்டும்.

* 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினந்தோறும் 2 மணிநேரம் வீட்டுப்பாடம் தரவேண்டும்.

* பள்ளிகளில் பாடங்களை நடத்துவதுடன் மாணவர்கள் விளையாடவும், பாடப்புத்தகங்களை தாண்டி இதர நூல்களை வாசிக்கவும் போதுமான நேரம் வழங்க வேண்டும்.

* பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டாய வசதிகள், மதிய உணவு போன்றவை போன்றவை போதுமானதாகவும், நல்ல தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* பள்ளிப் பையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அல்லது அதன் அளவைக் குறைப்பதற்காக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் எளிதாக அணுகக்கூடிய அளவில் நல்ல தரமான குடிநீரை வழங்குவது பள்ளி நிர்வாகத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்தப் பரிந்துரைகளை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவற்றை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளி புத்தகப்பை கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்