விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நிரவ் மோடி விவகாரத்தில்... அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு!.. மோசடி மன்னர்களுக்கு செக்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் மோசடிகளினால் வங்கிகளுக்கு ரூ.22,583 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மூவரும் இந்தியாவிலிருந்து கிளம்பி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் தொடர்பாக attach செய்யப்பட்ட ரூ.6,600 கோடி மதிப்புள்ள பங்குகள் இந்திய ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு மாற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், புதன் கிழமையன்று கடன் மீட்பு தீர்ப்பாயம், வங்கிகள் சார்பாக மல்லையாவின் யுனைடெட் பிரவரீஸ் நிறுவனத்தின் பங்குகளை ரூ.5824.50-க்கு விற்றது. ஜூன் 25ம் தேதி மேலும் பங்குகள் விற்பனை மூலம் ரூ.800 கோடி திரட்டப்படும்.
அமலாக்கத்துறையின் உதவினால் பொதுத்துறை வங்கிகள் பங்குகளை விற்றதன் மூலம் ரூ.1,357 கோடி மீட்டது. எனவே, அமலாக்கத்துறை பறிமுதல் செய்த, attach செய்த சொத்துக்களின் மூலம் வங்கிகளுக்கு ரூ.9,041.50 கோடி கிடைத்தது.
இது நாள் வரை அட்டாச் செய்யப்பட்ட தொகை ரூ.18,170.02 கோடி, ரூ.329.67 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன. ரூ.9041.50 கோடி தொகை வங்கிகளிடம் அளிக்கப்பட்டது.
நிதிமுறைகேடு குற்றவாளிகளின் attach செய்யப்பட்ட சொத்துகள் மதிப்பு ரூ.18,170.02 கோடியாகும். இதில் இவர்களது அயல்நாடு சொத்துகள் ரூ.969 கோடியும் அடங்கும். வங்கிகளின் மொத்த நஷ்டம் ரூ.22,585.83 கோடி, இப்போது சொத்துகள் முடக்கம், attach மூலம் திரட்டப்பட்ட தொகை 85% ஆகும்.
இதற்கிடையே, பல சொத்துக்கள் போலி நிறுவனங்களின் பெயரிலும் மூன்றாம் நபர்கள், உறவினர்கள் வசம் கொடுத்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் ஒப்புக் கொண்டது, யுகே உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் இவர் மேல் முறையீடு செய்ய முடியாது என்ற நிலையில், மல்லையா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டே ஆக வேண்டும். ஆனால், விவகாரம் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் வசம் உள்ளது.
அதே போல் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட், வைர வியாபாரி நிரவ் மோடியையும் இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக லண்டன் சிறையில் இருக்கிறார். சோக்சி தற்போது டொமினிகாவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மெஹுல் சோக்ஸி விவகாரம்: "நட்சத்திர ஹோட்டலில் ரூம்..! பிளைட் டிக்கெட் எல்லாம் போட்டு கொடுத்தார்..!” - பரபரப்பு கிளப்பும் 'தோழி’ பார்பரா ஜராபிகா!
- பட்ஜெட் 2021: 'தனியாருக்குப் போகப்போகும் 2 பொதுத்துறை வங்கிகள்'... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
- 'டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டண உயர்வு...' 'இனி ஃப்ரீயா கொடுக்க முடியாது...' - அதிரடி அறிவிப்பை வெளிட்ட தனியார் வங்கிகள்...!
- ‘அந்த ஜெயிலுக்கு மட்டும் அனுப்பாதீங்க’.. நீதிமன்றத்தில் வாதிட்ட ‘நீரவ் மோடி’.. அப்படி என்ன காரணம்..?
- ‘100% கடனையும் திருப்பி கொடுத்திடுறேன்’.. ‘ஆனா அத மட்டும் முடிச்சு வச்சுருங்க’.. விஜய் மல்லையா பரபரப்பு ட்வீட்..!
- ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா!?.. இந்தியாவை அதிரவைத்த சர்ச்சை!.. முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கியின் விளக்கம்!
- 'பிப்ரவரி மாதத்தின் இந்த தேதிகளில் எந்த வங்கியும் இயங்காது!'...
- 'காவிரி கரையோரம் வசிக்கும்'... '12 மாவட்ட மக்களுக்கு'... 'வெள்ள அபாய எச்சரிக்கை'!
- 'அக்டோபர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறை'... விவரம் உள்ளே!
- ‘அமலுக்கு வரும் புதிய அதிரடி கட்டுப்பாடுகள்..?’ ‘அதிகரித்துவரும் ஏடிஎம் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை’..