‘கேரளாவிலேயே மிகப் பெரிய பங்களா’... ‘துபாயைக் கலக்கிய இந்திய தொழிலதிபர் எடுத்த துயர முடிவு’... ‘போலீசார் தந்த அதிர்ச்சி தகவல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

துபாயில் மாபெரும் எண்ணெய் வியாபாரியாக வலம்வந்த கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாய் அரக்கல், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்தவர் ஜாய் அரக்கல். 54 வயதான இவர் துபாயில் அக்கவுன்டன்ட்டாகப் பணிபுரிந்த இவர், இன்னோவா குரூப் நிறுவனங்களைத் தொடங்கினார். இந்தக் குழுமம் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், கப்பல் போக்குவரத்து, கட்டுமானம் போன்ற துறைகளில் தொழில் செய்து வருகிறது. ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் ஈட்டி வந்த ஜாய் அரக்கல், அண்மையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், கடன் தொல்லையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 23- ந் தேதி இவர் துபாயில், பே ஏரியா பகுதியில் உள்ள கட்டடத்தின் 14- வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் சிறப்பு விமானத்தில் கோழிக்கோடு கொண்டுவரப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான வயநாட்டின் மனந்தவாடியில் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பிரத்யேக அனுமதி அளித்துள்ளது. ஜாய் அரக்கல் சமூகப்பணிகளுக்குப் பெயர் பெற்றவர்.

கேரள வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்குத் தனது சொந்த நிலத்தில் 40 வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். இந்தியாவில் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளார். தனது சொந்த ஊரில் 45,000 சதுர அடியில் பிரமாண்ட பங்களா ஒன்றை ஜாய் அரக்கல், கட்டியுள்ளார். கேரளாவிலியே மிகப் பெரிய வீடு இதுதான். ஆசை ஆசையாக கட்டிய இந்த வீட்டில் ஒரு மாத காலம் மட்டுமே வாழ்ந்த, ஜாய் அரக்கல் தற்கொலை செய்துகொண்டது வயநாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமீரகத்தில் 10 ஆண்டுக்காலம் செல்லுபடியாகக் கூடிய, கோல்டன் விசா பெற்ற இரண்டாவது இந்தியர் ஜாய் அரக்கல் என்பதும் குறிப்பிடத்தக்கது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்