தேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணியாக  தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் விதிகளை மீறிய விளம்பரங்களையும், கருத்துக்களையும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதுவுமாக இருந்து வந்தது.

இதன் காரணமாக பிரச்சாரங்களில் பேச வேண்டிய, பேசக்கூடாதவை, தேர்தலுக்கும் எத்தனை நாட்களுக்கு முன்வரை பிரச்சாரங்களைச் செய்யலாம், பொதுவாக எத்தனை மணி நேரம் பிரச்சாரங்களைச் செய்யலாம், என்ன விதமான விளம்பரங்களை எல்லாம் தேர்தலைக் காரணம் காட்டி செய்யக் கூடாது உள்ளிட்டவை பற்றிய விழிப்புணர்வு அறிக்கைகளை தேர்தல் ஆணையம் முன்பே கூறியிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, பேஸ்புக்கும் தனது ஜனநாயக பங்களிப்பை இந்திய அரசுக்கு அளிக்க முன்வந்தது. அதன்படி, தேவையற்ற சர்ச்சைக்குரிய, ஜனநாயக விரோத போக்குகளுடன் கூடிய பிரச்சார பதிவுகளும், கருத்துக்களும் கண்காணிக்கப்படுவதாக பேஸ்புக் தெரிவித்தது.

இதன் விளைவாக 543 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் பொதுத் தேர்தலையொட்டி, அரசியல் விளம்பர, பிரச்சாரக் கருத்துக்கள் முதலானவை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிராகவும், குலைப்பது போன்றும் இருந்ததால் பேஸ்புக்கில் இருந்து சுமார் 574 போஸ்டுகளும், அரசியல் விளம்பரங்களும், 49 ட்விட்டர் கணக்குகளில் இருந்து 39 ட்வீட்டுகளும், இன்னும் சில யூ டியூப் வீடியோக்களும், சில வாட்ஸ்-ஆப் மெசேஜ்களும் நீக்கப்பட்டுள்ளதாக அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்