நோட்டாவுக்கு அதிக ‘ஓட்டு’ விழுந்தால் தேர்தலை ரத்து செய்யணும்.. பாஜக மூத்த தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில், தங்களது தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கும் முறை இருந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இந்நிலையில் தேர்தலில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், ‘ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறும்போது, வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழும் பட்சத்தில் அந்தத் தேர்தலை ரத்து செய்து, அடுத்த 6 மாதத்துக்குள் அந்த தொகுதியில் புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் அந்தத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால் நேர்மையான, தேசப்பற்றுள்ள நபர்களைத் தேர்தலில் நிறுத்தும் நிலை அரசியல் கட்சிகளுக்கு உருவாகும். அதேபோல போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை, மக்களின் உண்மையான ஜனநாயகத்தைக் குறிப்பதாக அமையும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது விவாதம் இல்ல.. நாட்டின் இப்போதைய தேவையே இதுதான்!'.. தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடியின் புதிய ‘கொள்கை!’
- 'ஆறு மனமே ஆறு'!.. 'போனது போச்சு... ஆக வேண்டியத பாருங்க'!.. டிரம்ப் எடுத்த அதிசய முடிவு!.. ஜோ பைடன் ஹேப்பி அண்ணாச்சி!!
- “ரொம்ப நாள் கேப்க்கு அப்றம் சென்னை வந்திருக்கேன்!.. இத பத்தி பேசாம எப்படி?” .. பாஜக தலைவர் ‘அமித் ஷா’ அதிரடி!
- 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமித்ஷாவின் வருகை'... 'அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை'... இவங்க இரண்டு பேரையும் சந்திப்பாரா?
- "Awesome மேடம், முன்னாடி 'சீட்'ல ஒண்ணு, பின்னாடி 'சீட்'ல ஒண்ணு..." 'கார்' விபத்து குறித்து பதிவு செய்த நபருக்கு 'குஷ்பு'வின் 'பதிலடி' ட்வீட்!!!
- ‘நாங்க கரெக்ட்டாதான் போனோம்'.. ‘திடீரென எங்கிருந்தோ வந்த கண்டெய்னர்’.. குஷ்பு பரபரப்பு தகவல்..!
- எலெக்சனில் நிற்கும் 'பெண்' வேட்பாளர்,,.. "அவங்களோட பேர வெச்சே 'ஃபேமஸ்' ஆயிடுவாங்க போல... அது தான் மிகப் பெரிய 'ஹைலைட்'"!!!
- மு.க.ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் எதிர்த்து போட்டியா? சீமான் ‘அதிரடி’ பதில்.. பரபரக்கும் தேர்தல் களம்..!
- கண்டெய்னர் லாரி மீது மோதிய ‘குஷ்பு’ சென்ற கார்.. வேல்யாத்திரைக்கு செல்லும் போது நடந்த அதிர்ச்சி..!
- 'பாஜகவில் இணைவாரா மு.க.அழகிரி'?... 'அவர் வந்தால்'... எல்.முருகன் அதிரடி!