கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உடைமைகளை ஹெலிபேடில் வைத்து எலக்ஷன் கமிஷன் சோதனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பாவின் உடைமைகளை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே தேர்தல் ஆணையம் என்பது தேர்தலுக்குப் பின்னர் வெற்றி பெற்ற கட்சி, பெரும்பான்மை கட்சி அல்லது எதிர்க்கட்சி என்றெல்லாம் அறிவிக்கப்படக் கூடிய கட்சிகளுக்கு இடையேயான தேர்தலை நிகழ்த்துவதில் நடுநிலை தன்மையை வகித்தாக வேண்டிய கட்டாய பொறுப்பில் உள்ளது. இந்திய அரசியல் சாசனப்படி, தேர்தல் ஆணையத்தின் மிக முழுமையான பணியே எவ்வித சார்புமின்றி ஒரு தேர்தலை தேசிய இறையாண்மை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிகழ்த்துவதுதான்.
அந்த வகையில் தேர்தல் ஆணையம் எப்போதுமே எல்லா தேர்தல்களிலும் பணப்பட்டுவாடா, தேர்தல் முறைகேடுகள், வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு இடையேயான தொடர்பு முரண்பாடுகள், வேட்பாளர்களுக்கு இடையேயான மறைமுக சாடல்கள், மோதல்கள், கடைசிநேர பரப்புரைகள், விதிகளை மீறிய பிரச்சார வழிமுறைகள் உள்ளிட்ட பலவற்றின் மீதான கண்காணிப்புகளைக் கொண்டிருப்பது வழக்கம்.
அதிலும் மிக முக்கியமாக தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கியஸ்தர்கள் மற்றும் முக்கியஸ்தராக அல்லாதவர்களின் உடைமைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்வதுண்டு. இந்த சோதனையை செய்வதற்கென்று நேரங்காலம், இடம், பொருள், ஏவல் என்று எதுவும் இருக்க வேண்டியதில்லை என்கிற சூழல் கடைசிநேர கெடுபிடியில் நிலவுவதுண்டு.
அப்படி இம்முறையும் தேர்தல் ஆணையத்தால் பல்வேறு நகரங்களுக்கு உட்பட்டு நிர்ணயிக்கப்பட்ட, தேர்தல் பறக்கும் படையினர் சிரத்தையுடன் பலவகையான சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பணப் புழக்கங்கள், விதிகளை மீறிய பணப்பட்டுவாடா, கணக்கில் வராத அளவிலான பணம் வாகனங்களில் கொண்டு செல்லப்படுதல் உள்ளிட்டவற்றை கையும் களவுமாக பிடித்து வருகின்றனர்.
ஆனால் இவையெல்லாம் அதிகாரம் மிக்கவர்கள், அதிகாரமற்றவர்கள், பொறுப்பில் இருந்தவர்கள் பொறுப்பில் அல்லாதவர்கள் என்று யார் மீது வேண்டுமானாலும் நிகழ்த்தப்படலாம் என்கிற சூழலில் கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பாவின் உடைமைகள், கர்நாடகாவில் உள்ள சிவமோகா ஹெலிகாப்டர் தளவாடத்தில் வைத்து சோதனை செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கையோட ஓட்டு போடுங்க.. மையோட வாங்க.. பைக் சர்வீஸ் இலவசம்’.. பிரபல நிறுவனம் அதிரடி ஆஃபர்!
- 'என்னால ஓட்டு போட முடியாது'...'தேர்தல் தூதுவராக' இருக்கும்...பிரபல 'கிரிக்கெட் வீரரின்' நிலை!
- 'போலீஸே நிறுத்துறுதில்ல.. நீ என் காரை மடக்குறியா?’.. சுங்க ஊழியருக்கு நேர்ந்த கொடுமை.. பதறவைக்கும் வீடியோ!
- "பாப்பாக்கு வயசு என்ன'?...'இரண்டு'...அட இன்னுமா பெயர் வைக்கல?...பிரச்சாரத்தில் கலகலப்பு!
- 'ஏப்ரல் 18 ஒரு முக்கியமான வேலை இருக்கு'...ஒளிபரப்பை நிறுத்த போகும் 'பிரபல தொலைக்காட்சி'!
- எரிச்சலில் டி.வி.யை உடைத்த கமல்.. காரணம் என்ன?
- நீட் தேர்வு ரத்து: 'அந்தர் பல்டி' அடித்த கூட்டணிக் கட்சி.. கவலையில் அ.தி.மு.க.!
- 'ராகுல் உயிருக்கு அச்சுறுத்தல்'?...'ஸ்நைப்பர் துப்பாக்கி' மூலம் குறியா?...அதிர்ச்சியை கிளப்பும் வீடியோ!
- 'அவர் நல்லவர்.. அவர ஜெயிக்க வையுங்க'.. சமந்தா சொல்லும் லாஜிக்.. வைரல் வீடியோ!
- 'வரூம்.. ஆனா வராது..' மோடியின் ‘இந்த ஒரு வாக்குறுதியை’ கிண்டலடித்த ஸ்டாலின்!