அதிகாலையில் அதிர்ந்த நிலம்.. துருக்கி, நியூசிலாந்தை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஆர்டர் செஞ்சது 12,000 ரூபா டூத் ப்ரஷ், ஆனா பார்சல்ல வந்தது..".. பெண் வாடிக்கையாளரின் வைரல் Tweet.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கட்ரா பகுதியில் இன்று அதிகாலை 5.01 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. கட்ராவில் இருந்து கிழக்கே 97 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை முறையே 33.10 டிகிரி மற்றும் 75.97 டிகிரியாக இருந்ததாகவும் நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் கட்ராவில் இருந்து கிழக்கே 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எனவும் நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

நிலநடுக்கம் காரணமாக எந்த இடத்திலும் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக மேகாலயாவின் கிழக்கு காசி மலைப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது காலை 9.26 மணிக்கு 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, பிப்ரவரி 13 அன்று அஸ்ஸாமின் ஹோஜாயில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இரவு 11.57 மணிக்கு அப்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இப்படி இந்தியாவில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த ஆறாம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. 7.8 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த  நிலநடுக்கம் மொத்த துருக்கியையும் ஸ்தம்பிக்க செய்திருக்கிறது. துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் காரணமாக இதுவரையில் 35 ஆயிரம் பேர் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்தில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் தலைநகர் வெலிங்டன் அருகே 6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரக் கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் முக்கிய தீவான மஸ்பேட்டில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்படி பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது உலக அளவில் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

Also Read | பசியோட இருக்காதீங்க.. துருக்கியில் தினந்தோறும் 5000 பேருக்கு சாப்பாடு.. மக்களை நெகிழ வச்ச பிரபல Chef.. வீடியோ..!

EARTHQUAKE, JAMMU KASHMIR, EARTH QUAKE HITS JAMMU KASHMIR KATRA REGION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்