BGMA Ticket BGM Shortfilm 2019

இனி 'இந்த' சிகரெட் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும்; தடை விதித்து மத்திய அரசு அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா முழுவதும் இ-சிகரெட் உற்பத்தி செய்வது, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அல்லது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவிற்கு இ-சிகரெட்டினை இறக்குமதி செய்வதுமான செயல்பாடுகள் முற்றும் முழுக்க, இந்தியாவில் தடை செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான அவசர சட்ட வரைவினை, ஏற்றுக்கொள்வதற்கான ஒப்புதலை மத்திய அரசு உடனடியாக வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்து இ-சிகரெட்டை விநியோகப்படுத்துவதற்கான நோக்கில், அதனை விளம்பரப் படுத்தும் நடவடிக்கைக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ-சிகரெட்டைப் பயன்படுத்துவதால் மூளை வளர்ச்சியில் தடை ஏற்படுவதாகவும், கற்றல் திறன் பாதிக்கப்படுவதாகவும், அதுமட்டுமல்லாமல், மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டதை அடுத்து மத்திய அரசு இதற்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIRMALASITHARAMAN, CIGARETTES, ECIGARETTES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்