"இவ்வளவு வித்தியாசமான வதந்தியை..." "வாழ்நாளில் கேட்டிருக்க மாட்டீங்க..." 'மிட்நைட்ல' என்ன 'ஹாலிவுட்' படம் பார்த்தானோ தெரியல... இது 'வேற லெவல்' வதந்தி...
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வானத்திலிருந்து மருந்து தூவப் போவதாகவும், அதனால் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் வாட்ஸ் ஆப்பில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலைவிட, அது குறித்து பரப்பப்படும் வதந்திகளால் தான் இந்தியாவில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் கறிக்கோழி கடனுக்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த ஒருவர், கோழிக்கறி மூலம் கொரோனா பரவுவதாக போகிற போக்கில் வாட்ஸ்ஆப்பில் தகவல் பரப்பியுள்ளார். அந்த செய்தி தீயாய் பரவ கடைசியில் கறிக்கோழி கிலோ 10 ரூபாய் என்கிற அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
மேலும் முட்டை விலையும் படு பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் கறிக்கோழி மற்றும் முட்டை வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதேபோல், மாட்டுசாணமும், மாட்டு கோமியமும் கொரோனா பரவலைத் தடுக்கும் எனக் கூறி கொல்கத்தாவில் ஒருவர் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்த அவலமும் நிகழ்ந்தது. அதை வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் வரிசையில் நின்றது.
பங்குசந்தைகளும் கடும் விழ்ச்சியை சந்தித்துள்ளது. பலரும் தங்கள் பணத்தை மொத்தமாக இழந்துள்ளனர்.
வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டும். அரசாங்கங்களுக்கு சவால் விடும் வகையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் வதந்திகளை பரப்பிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், பெங்களூரில் விநோதமான முறையில் கொரோனா தொடர்பாக வதந்தியை பரப்பி இருக்கிறார்கள். அதாவது, கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக கர்நாடக அரசு இரவில் வானில் இருந்து மருந்து தெளிக்கவுள்ளதாகவும், அதனால் பெங்களூர் நகரவாசிகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்பட்ட தகவல்தான் பெங்களூரில் தீயாய் பரவியுள்ளது. அத்துடன், இந்தத் தகவலை நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலருக்கும் உடனடியாக ஷேர் செய்ய வேண்டும் என்றும் அந்த வாட்ஸ் ஆப் மெசேஜ்ஜில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கொரோனா மருந்து வெறும் 500 ரூபாய் தான்..." 'கொல்கத்தாவில்' பரபரப்பு 'விற்பனை'... ஒரு கிலோ 'மாட்டுச்சாணம்' ரூ.500... ஒரு லிட்டர் 'கோமியம்' ரூ. 500 முந்துபவர்களுக்கு 'முன்னுரிமை'...
- "எது... கொரோனா பள்ளமா?..." "ஒரு வைரஸ்ன்னு கூட பாக்காமா..." "பேரு வச்சு விளையாடுறீங்களே..." "மனசாட்சி இல்லையா உங்களுக்கு..."
- "நீங்க தொட்டாலே போதும்..." "நொடியில் தொற்றிக் கொள்ளும்..." "பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்..." 'இத்தாலி' வெளியிட்ட 'கொரோனா' விழிப்புணர்வு 'வீடியோ'...
- 'கொரோனா' தாக்கம் தமிழகத்தில் 'எங்கெல்லாம்' உள்ளது?... 'சந்தேகங்களை' 'யாரிடம்' கேட்க வேண்டும்... 'சுகாதாரத்துறை' என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது?... 'விவரங்கள் உள்ளே...'
- 'இப்போ நான் ஃபேமஸ் ஆயிட்டேன்...' 'எல்லாரும் கடை முன்னாடி நின்னு செல்ஃபி எடுக்குறாங்க...' பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த கொரோனா டெக்ஸ்டைல்ஸ்...!
- "மருந்து கண்டுபிடித்து விட்டோம்..." "இது கொரோனாவில் 7வது வகை வைரஸ்..." "முதல் 6 வகைக்கு நாங்கள் தான் மருந்து கண்டுபிடித்தோம்..." 'ஹாலந்து' விஞ்ஞானிகள் 'சாதனை' ...
- 'கொரோனா' 'தடுப்பூசி' முதன் முறையாக.... '43 வயது' பெண்ணுக்கு 'செலுத்தப்பட்டது'... 'முடிவுக்காக' காத்துக் கொண்டிருக்கும் 'உலகம்'...
- 'வஞ்சிரம் மீன்' வாங்க 'பேங்க்'ல லோன் எடுக்கணும் போல'... 'கொரோனா'வால் விண்ணுக்கு பறந்த விலை!
- 'கொரோனா' தடுப்பு மருந்தை 'சொந்தம்' கொண்டாடும் 'அமெரிக்கா'... 'கடுப்பான ஜெர்மனி'....'ஒட்டு மொத்த' உலகத்துக்கும் 'வழங்க' முடிவு...
- "ஊரே காலியா இருக்கு..." "ஆனா 'துப்பாக்கி' வாங்க 'வரிசை கட்டி' நிக்கிறாங்க..." "எதுக்குத் தெரியுமா?..."