VIDEO: பார்சலுக்குள் இருந்த ‘கல்யாண பத்திரிக்கை’.. ‘பிரிச்சு பாத்து மிரண்டுபோன அதிகாரிகள்’.. விமான நிலையத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண அழைப்பிதழில் போதைப்பொருளை மறைத்து கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா விமான நிலையத்தின் சரக்கு பெட்டகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பட உள்ள பார்சலை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில் எதோ துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சந்தேகம் அதிமாகவே பார்சலை பிரித்துப் பார்த்துள்ளனர். அதற்குள் திருமண அழைப்பிதழ் அட்டைகள் இருந்துள்ளன.
இதனை அடுத்து அழைப்பிதழ் அட்டையை கிழித்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அழைப்பிதழுக்குள் வெள்ளை நிறத்தில் பவுடர் போன்று பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதனை சோதனைக்கு உட்படுத்தியதில், அது மருத்துவர்கள் மயக்க மருந்தாக பயன்படுத்தும் எபெட்ரின் (Ephedrine) என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் போதை பயன்பாட்டிற்காக திருமண அழைப்பிதழுக்குள் மறைத்து அனுப்பட்டது தெரியவந்துள்ளது.
மொத்தம் 43 திருமண அழைப்பிதழில் இருந்து 86 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 கிலோ எடையுள்ள இவற்றின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பார்சல் மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழை அச்சடித்த அச்சகம் மற்றும் மதுரையில் உள்ள நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'வாவ்... நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுர மாதிரி ஒரு குத்து!'... 'காவல்துறை அதிகாரிகளின்' இந்த நடனம் எப்படியிருக்கு?!'... 'வைரல்' வீடியோ!
- ‘ரூ 15 லட்சம்’ பணம்... புதிய நிறுவனத்தில் ‘வேலை’... மனைவியின் ‘தங்கை’ மீதான ஆசையில்... ‘இன்ஜினியர்’ செய்த ‘நடுங்கவைக்கும்’ காரியம்...
- "எரிமலையின் ஓரத்தில் நின்று மகுடி வாசிக்க பாக்காதிங்க..." "அது எப்ப வெடிக்கும்னு தெரியாது..." எச்சரிக்கை விடுக்கும் 'அரசியல்' தலைவர் 'யார்' தெரியுமா?
- ‘தற்காலிகமாக மூடிய பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம்’... ‘காரணம் இதுதான்’... விபரம் உள்ளே!
- தம்பி! நீங்க அங்க போய் 'வெளையாட' வேணாம்... நாங்க 'சொல்றத' மட்டும் கேளுங்க... முன்னணி வீரருக்கு 'ஆர்டர்' போட்ட பிசிசிஐ!
- காதலுக்கு கடும் எதிர்ப்பு... 'திருமணத்துக்கு' முன் வீட்டைவிட்டு சென்று... காதல் ஜோடி எடுத்த 'விபரீத' முடிவு!
- காதலியை 'திருமணம்' செய்துவைக்க... பெற்றோர் மறுப்பு... சோகத்தில் ஐடி ஊழியர் எடுத்த 'விபரீத' முடிவு!
- ‘ஸ்கூல் நேரத்துல பள்ளி மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த ஆசிரியை!’.. ‘சிக்கிய பின் வைத்த கோரிக்கை!’
- "ராமர் கோவில் கட்டும் பணியில் என்னால் ஈடுபட முடியாது..." "என் பெயர் தான் சாமி, ஆனால் நான் சாமியார் இல்லை...." 'சுப்பிரமணியன் சுவாமி' கருத்து...
- VIDEO: ‘குழந்தை உயிர காப்பாத்தணும்’.. 400 கிமீ தூரம், மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்.. பரபரப்பு நிமிடங்கள்..!