'2 கிராம்தான்..'.. 120 பேரு க்ளோஸ்.. மிரளவைக்கும் போதைப் பின்னணி.. சிக்கியது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் எம்.டி.எம்.ஏ ரக போதைப் பொருள்கள் அதிகம் புழங்குவதாகவும், கடத்தல்கள் நிகழ்வதாகவும், அதனை மாணவர் ஒருவர் கடத்திக் கொண்டு வருவதாகவும், கலால் பிரிவு போலீஸாருக்கு இளைஞர் ஒருவர் துப்பு கொடுத்துள்ளார்.

அதன்படி, பெங்களூருவில் இருந்து ஷெபி என்கிற ஒருவர், போதைப் பொருட்களைக் கடத்திக்கொண்டு திரிசூருக்கு வருவதாக, தகவல் அளித்த இளைஞரின் உதவியோடு, ஷெபி என்கிற அந்த கடத்தல்கார பெங்களூரு மாணவர் இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவில் கலால் பிரிவு போலீஸார், இணைந்தனர்.

அதன் பின் ஷெபியை ட்ரேஸ் செய்து, சேஸ் செய்து, திரிசூரின் மன்னுதி என்கிற இடத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்ததோ வெறும் 2 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப் பவுடர்தான்.  ‘அட .. இதுக்கா இவ்ளோ பில்டப்பு?.’ என்று கேட்டால்  ‘வாய்ல அடிங்க.. வாய்ல அடிங்க’, ஏனென்றால் இதன் ஒரு கிராம் 5 ஆயிரம் ரூபாய்.

இதில் 2 கிராம் உட்கொண்டால் 120 பேரை போதையில் ஆழ்த்துமாம். இதன் அளவு, அரை மி.லி., அதிகமானாலும் மரணவாசல்தான். இதில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான அளவிலான பவுடரை மட்டுமே 500 ரூபாய்க்கு விற்கிறார்கள். 45 நிமிடங்களுக்குப் பிறகு வேலையை பார்க்கத் தொடங்கும், இதனை உட்கொள்வதே, 9 மணி நேரம் கண்ணைக் கட்டி, சிந்தனையை, சுய நினைவை எல்லாம் கைது செய்து வைத்துவிடும் அளவுக்கு அபாயகரமானது.

இதுபற்றி ஷெபியிடம் விசாரித்தபோது நைஜீரிய நாட்டைச் செர்ந்த பெஞ்சமில் பிராணோ என்பவர் மூலம் இந்த போதைப் பொருள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் விசாரணையை மேலும் முடுக்கியுள்ளனர். கல்லூரி மாணவர்கள் தொடங்கி, ஐடி இளைஞர்கள் தொடங்கி பலரையும் இதுபோன்ற அபாய உலகத்தில் இருந்து மீட்டெடுப்பதன் அவசியத்தை கேரள தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

KERALA, DRUGS, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்