"என் உண்மையான பெயர் அது இல்ல".. இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு சொல்லிய தகவல்.. ஷாக்-ஆன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் புதிய ஜனாதிபதியான திரௌபதி முர்மு சமீபத்தில் தன்னுடைய உண்மையான பெயர் குறித்து பேசியிருக்கிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Also Read | மலை மாதிரி எழுந்த மணல்புயல்.. ரோட்ல சிக்கிய பயணிகள்.. உலக அளவில் திகைப்பை ஏற்படுத்திய வீடியோ..!
இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் திரௌபதி முர்மு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராமநாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடந்த 18 ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு-வும் எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் முதல் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் ஜனாதிபதியாகியுள்ளார் முர்மு.
என்னுடைய பெயர் அது இல்ல
சமீபத்தில் தன்னுடைய உண்மையான பெயர் குறித்து பேசியுள்ளார் ஜனாதிபதி முர்மு. அப்போது, தனது பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்கு திரௌபதி என பெயர் சூட்டியதாக தெரிவித்திருக்கிறார் அவர். ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார்.
தன்னுடைய பெயர் குறித்து பேசியுள்ள அவர்,"திரௌபதி என்பது எனது உண்மையான பெயர் அல்ல. இது வேறு மாவட்டத்தைச் சேர்ந்த எனது ஆசிரியரால் வழங்கப்பட்டது. பழங்குடி மக்கள் அதிகம் இருக்கும் மாயுர்பஞ்ச் மாவட்டத்துக்கு 1960 களில் பாலசோர் அல்லது கட்டாக்கில் இருந்து அதிகமான பள்ளி ஆசிரியர்கள் வருவார்கள். என்னுடைய நன்மைக்காக புடி (puti) என்ற எனது முதற் பெயரை ஆசிரியர் திரௌபதி என மாற்றினார்" என்றார்.
மஹாபாரதம்
இதிகாசமான மகாபாரதத்தில் வரும் திரௌபதி எனும் பெயரையே தனக்கு தன்னுடைய ஆசிரியர் சூட்டியதாக கூறிய முர்மு," சந்தாலி கலாச்சாரப்படி பெண்குழந்தை பிறந்தால் அவருடைய பாட்டியின் பெயரும் ஆண் குழந்தை என்றால் தாத்தாவின் பெயரும் சூட்டப்படும்" என்றார்.
தற்போது 64 வயதான முர்மு ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்