'ரயில் நிலையத்தில் வெளுத்த மழை.. துடிதுடித்த கர்ப்பிணி'.. 'உதவ' வந்த ஆட்டோ டிரைவரின் கதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே உள்ள விரார் பகுதியைச் சேர்ந்த சாகர் கம்லக்கர் கவாட், ஆட்டோ டிரைவராக பணியில் உள்ளவர். இவர் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு உதவியதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய  ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

முன்னதாக விரார் நிலையத்துக்கு தாமதமாக வந்த ரயிலில், தன் 7 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர் பயணம் செய்துவந்துள்ளார். ஆனால் விரார் ரயில் நிலையம் வந்தடைந்தபோதெல்லாம் அவரது மனைவிக்கு பிரசவ வலி உண்டாகியுள்ளது. எனினும் அவிரார் நிலையத்தில் இறங்கி அதிகாரிகளிடம் உதவி கேட்டபோது யாரும் முன்வராததாக தெரிகிறது.

இதனையடுத்து, அந்த கணவர் வெளியில் சென்று ஆட்டோ டிரைவர் சாகர் கம்லக்கர் கவாட்டிடம் கூறியுள்ளார். அவரோ கர்ப்பிணி பெண்ணை ஆட்டோவில் ஏற்றுவதற்காக, ஆட்டோவை எடுத்துக்கொண்டு ரயில்வே நடைமேடைக்கே வந்துள்ளார். ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தான் ரயில் நிலைய விதிகளை மீறி ஆட்டோவுட உள்நுழைந்து கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்றதாக கவாட் கூறியுள்ளார்.

ஆனால் ரயில் நிலைய காவலர்களோ, விதிகளை மீறி கவாட், ஆட்டோ ஓட்டியதால், பலர் காயமடைந்ததாக புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் கவாட்டை கைது செய்ததாகவும் கூறியுள்ளனர். ரயில் நிலையத்தில் கவாட் ஆட்டோ ஓட்டிய வீடியோ ஒருபுறம் இணையத்தில் வைரலாகி வர, இன்னொரு புறம் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

RAILWAY, INDIANRAILWAYS, AUTO, PREGNANT WOMAN, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்