'தண்ணியில கலந்து குடிக்கும் கொரோனா மருந்து...' '110 பேர வச்சு டெஸ்ட் பண்ணியிருக்கோம்...' - ஒப்புதல் அளித்த மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா மருந்தை இனி தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கண்டுபிடித்துள்ளது மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு.
உலகில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து, அனைத்து உலக நாடுகளும் வித விதமாக கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிகழ்வு கொரோனா தடுப்பு சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் இந்த மருந்தை, 110 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்ட போது, நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்துள்ளது.
அதோடு கொரோனா தொற்று நோயாளிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது. இந்த டிஆக்ஸி டி- குளுகோஸ் சந்தைக்கு வந்தால் ரெம்டெசிவிரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் மாறலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க ஊருக்கு வாங்க... புடிச்சிருந்தா விளையாடுங்க!.. ஆனா ஒரு கண்டிஷன்'... ஐபிஎல்-ஐ நடத்தி முடிக்க... பிசிசிஐ-க்கு வந்த ஜாக்பாட் கால்!
- ‘வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்’!.. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா.. ட்விட்டரில் ஒரு வேண்டுகோள்..!
- 'நீங்க செஞ்ச இந்த உதவிய வாழ்க்கைல மறக்கமாட்டோம்'!.. மும்பை இந்தியன்ஸ் அணி செய்த காரியத்தால்... வணங்கி நிற்கும் பிசிசிஐ!.. நெகிழ்ந்த வீரர்கள்!
- 'வேகமெடுக்கும் கொரோனா'... 'இந்தியப் பயணிகள் யாரும் வரக்கூடாது'... அதிரடி தடை போட்ட நாடு!
- எப்போ தாங்க இந்த 'ரெண்டாவது அலை' குறையும்...? 'கொரோனா பரவல் குறைவது குறித்து...' - பிரபல வைராலஜிஸ்ட் பதில்...!
- ‘2 வாரத்துக்கு முன்னாடி அம்மா, இப்போ அக்கா’!.. இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் வீட்டில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!
- ”அஜ்மல் கசாப்பை விட மோசமானவர்...” மருத்துவமனை படுக்கைகள் விற்கப்பட்ட சர்ச்சை... பாஜக - சித்தார்த் இடையே மீண்டும் மல்லுக்கட்டு... ட்ரோல் செய்து டிரண்டாக்கும் நெட்டிசன்கள்... - என்ன நடந்தது?
- எனக்கு 'அத' இந்தியாவுக்கு தர்றதுல சுத்தமா 'இன்ட்ரெஸ்ட்' இல்ல...! என்ன பொசுக்குன்னு பில்கேட்ஸ் 'இப்படி' சொல்லிட்டாரு...? - 'அந்த' பேட்டர்ன் எங்ககிட்ட மட்டும் தான் இருக்கும்...!
- 'முன்னாடி மாதிரியும் பரவுது...' அதே நேரத்துல 'இப்படியும்' கொரோனா வைரஸ் பரவுறதா கன்ஃபார்ம் பண்ணியிருக்காங்க...! - உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல்...!
- ‘சிஎஸ்கே அணியை துரத்தும் கொரோனா’!.. மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதி.. வெளியான தகவல்..!