பெண் மருத்துவர் தற்கொலை: 'நீங்க' 3 பேரும்... அந்த 'ஹாஸ்பிடலுக்கு' உள்ள காலடி எடுத்து வைக்கக்கூடாது... நீதிமன்றம் கடும் காட்டம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் மருத்துவர் பாயல் தற்கொலை வழக்கில் கைதான 3 பெண் மருத்துவர்களும் மருத்துவமனை வளாகத்திற்குள் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
மும்பை நாயர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்தவர் பெண் டாக்டர் பயல். இவர் கடந்த வருடம் மே மாதம் சாதிரீதியான தூண்டுதல் காரணமாக கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மேற்படிப்பு சீனியர் மாணவிகள் ஹேமா அகுஜா, பக்தி, அங்கிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து 3 பேருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அப்போது 3 பேரும் கோர்ட்டு அனுமதியின்றி மும்பையைவிட்டு வெளியேற கூடாது, நாயர் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் நுழைய கூடாது போன்ற கடும் நிபந்தனைகளை விதித்தது. இந்த நிலையில் தாங்கள் மீண்டும் மருத்துவ மேற்படிப்பை தொடரவும், நாயர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழையவும் அனுமதி வழங்குமாறு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மாணவிகளுக்கு நாயர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கக்கூடாது என அரசுத்தரப்பு வக்கீல் மற்றும் நாயர் மருத்துவமனை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாணவிகள் மூவருக்கும் மேற்படிப்பு தொடர அனுமதி அளிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 9 ஆண்டுகளுக்குப்பின் நடந்த 'ரீயூனியன்' மீட்டிங்... 'கிளாஸ்மேட்டால்' இளம்பெண்ணுக்கு 'நேர்ந்த' கொடுமை!
- ‘சார் என்ன காப்பாத்துங்க’.. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ‘போன்கால்’.. சாமி கும்பிடபோன இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!
- 'சிலிண்டர்' போட போன எடத்துல செம 'லவ்வு' ... இளம்பெண்ணை 'திருமணம்' செய்த 16 வயது சிறுவன்... 'போலீசில்' போட்டுக்கொடுத்த அக்கம் பக்கத்தினர்!
- 'கூல்டிரிங்ஸ் தான் சும்மா குடி'... பள்ளி மாணவிக்கு... 'மாணவனால்' நடந்த கொடூரம்... போக்சோவில் 'அள்ளிச்சென்ற' போலீஸ்!
- ‘மரத்தில் தொட்டில் கட்டி’.. கைக்குழந்தையுடன் வேலை பார்த்த ‘பெண் காவலர்’.. ட்ரம்ப் வருகை பாதுகாப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- 'மருமகளின்' கள்ளக்காதலால்... மகன் தூக்குப்போட்டு 'தற்கொலை'... ஆத்திரத்தில் 'தந்தை' செய்த விபரீதம்!
- 'சிவராத்திரி' விழாவுக்கு சென்றுவிட்டு 'திரும்பியபோது' பரிதாபம்... நேருக்கு நேர் 'மோதிக்கொண்ட' கார்கள்... 2 பேர் பலி... 7 மாத 'குழந்தை' உள்ளிட்ட 8 பேர் படுகாயம்!
- VIDEO: 'வாவ்... நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுர மாதிரி ஒரு குத்து!'... 'காவல்துறை அதிகாரிகளின்' இந்த நடனம் எப்படியிருக்கு?!'... 'வைரல்' வீடியோ!
- 'கை, கால கட்டிப்போட்டு... 3 மணி நேரம் காட்டுத்தனமா'... 'உலக அரங்கில்'... 'இந்தியா'வுக்கு பெருமை சேர்த்த 'பெண்மணி'... 'கண்ணீர்' மல்க கதறிய கொடூரம்!
- 'கல்யாணத்துக்கு போகணும்' நகையைத் திருப்பி தாங்கன்னு... 'பொண்டாட்டி' சண்டை போட்டா... கடன் கேட்டேன் யாரும் குடுக்கல... 'குமரியில்' நடந்த கொடூரம்!