'சமையல் எரிவாயு விலையை அதிரடியாக குறைத்த 'மத்திய' அரசு'!.. உடனடியாக 'அமலுக்கு' வருகிறது!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வந்தன.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.100 விலை உயர்த்தப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாள்தோறும் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சிலிண்டர் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிலிண்டர் ஒன்றின் இன்றிய விலை ரூ.835 ஆக உள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் நாளை முதல் ரூ.825க்கு சிலிண்டர் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்