‘18 வருசம் எப்படிங்க அலட்சியமா விட்டீங்க’.. விசிலால் ஏற்பட்ட விபரீதம்.. இளைஞரின் ‘ஸ்கேன்’ ரிப்போர்ட்டை பார்த்து மிரண்ட டாக்டர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இளைஞரின் நுரையீரல் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ் (வயது 32). இவர் பல ஆண்டுகளாக மூச்சு திணறலால் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் தொடர் இருமலாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும், முழுமையாக குணமடையாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது சூரஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். இதில் சூரஜின் நுரையீரல் பகுதியில் ஒரு சிறிய பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை செய்து அந்த பொருளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நுரையீரல் சிறப்பு பிரிவு மருத்துவர்கள் சூரஜ்-க்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவரது நுரையீரலில் ஒரு பேனா மூடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து அந்த பேனா மூடியை அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்துள்ளனர். தற்போது அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக கூறிய மருத்துவர்கள், ‘சூரஜ் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது அடிக்கடி பேனா மூடியை வைத்து விசில் அடித்துள்ளார். ஒருமுறை இதுபோல் விசில் அடித்த போது பேனா மூடியை அவர் விழுங்கி விட்டார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்தபோது எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால் அதன்பின்பு சூரஜ் அடிக்கடி சுவாச பிரச்சனை மற்றும் இருமலால் அவதிப்பட்டார். அதற்கு மட்டும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இப்போதுதான் அவரது நுரையீரலில் பேனா மூடி சிக்கி இருந்தது தெரியவந்தது’ என தெரிவித்துள்ளனர். சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கேரளாவில் பயமுறுத்தும் எண்ணிக்கை'... 'கையை மீறி செல்கிறதா'?... புதிய கட்டுப்பாடுகள்!
- ‘இப்படியே போனா சரிப்பட்டு வராது’.. வேகமாக அதிகரிக்கும் கொரோனா பரவல்.. கேரள அரசு அதிரடி நடவடிக்கை..!
- 'கேரளாவில் அதிகரிக்கும் தொற்று'... 'கோவைக்கு வர கடும் கட்டுப்பாடுகள் அமல்'... அதிரடி மாற்றங்கள்!
- கேரளாவை தொடர்ந்து ‘மற்றொரு’ மாநிலத்தில் பரவிய ஜிகா வைரஸ்.. உடனே சுகாதார குழுவை அனுப்பிய மத்திய அரசு..!
- 'என்ன யாருன்னு தெரியுதா'?... 'கதவை திறந்ததும் ஒரு நிமிடம் ஆடிப்போன தாய்'... 45 வருடம் கழித்து நடந்த ஆச்சரியம்!
- இந்த 'வேலை'லாம் நமக்கு சரிபட்டு வராது...! 'வேலையை ராஜினாமா பண்ணிட்டு...' 'தம்பதியினர் போட்ட மாஸ்டர் பிளான்...' - ஆஹா... இது அல்லவா சுக வாழ்வு...!
- 2 வருஷமா கோர்ட்டில் 'வாதாடிய' வக்கீல்...! 'ஒரு லெட்டரில் வந்த தகவல்...' 'உண்மை என்னனு விசாரிச்சப்போ...' - மேலும் ஒரு அதிர்ச்சி...!
- ‘உயிரோட இருக்குறது குடும்பத்துக்கே தெரியாது’.. 45 வருச வைராக்கியம்.. வேலைக்காக ‘வெளிநாடு’ போனவருக்கு நேர்ந்த சோகம்..!
- எனக்கு 'இவ்வளவு பணம்' வரப்போகுதுன்னு தெரிஞ்ச உடனே... 'அப்படியே உறைஞ்சு போயிட்டேன்...' - கட்டிடத் தொழிலாளிக்கு 'கேரள பம்பர்' லாட்டரியில் அடித்த ஜாக்பாட்...!
- கல்யாணம் முடிஞ்சதும் இந்த சர்டிபிகேட் கொடுக்கணும்.. அதிர்வலையை ஏற்படுத்திய ‘வரதட்சணை கொடுமை’ விவகாரம்.. கேரள அரசு அதிரடி..!