‘மனிதாபிமானத்துடன் சேவை புரியும் மருத்துவ பணியாளர்கள்!’... ‘அவங்க இங்கயே தங்கிக்கலாம்!’.. ‘டாடா குழுமத்தின் நெகிழ வைக்கும் முயற்சி!’
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கூட கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால் பணி முடிந்து வீடு திரும்பும் மருத்துவர்களும் செவிலியர்களும் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
இதனால் மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் டாடா குழுமத்துக்கு சொந்தமான தாஜ் குரூப் ஓட்டல்களில் தங்கி கொள்ளலாம் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரியா சுலே உறுதி செய்ததோடு தமது ட்விட்டர் பக்கத்தில் கொலபாவில் உள்ள தாஜ் மற்றும் பாந்திராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டல்களில் மருத்துவப் பணியாளர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் இதற்காக ரத்தன் டாட்டாஜிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக கொரோனாவுக்கு எதிராக போராடும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட 500 கோடி ரூபாய் நிதியை ரத்தன் டாடா வழங்கியதாகவும், அதைத்தொடர்ந்து டாடா சன்ஸ் அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் நிவாரண பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்கப்பட்டதாகவும் அந்த அறக்கட்டளையின் தலைவர் எம். சந்திரசேகரன் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் மனிதாபிமானத்துடன் தன்னலமற்ற சேவை புரியும் மருத்துவ பணியாளர்கள் நல்ல உடல் நலத்துடனும், பாதுகாப்புடனும், மனநலத்துடனும் வாழ வாழ்த்துவதாக தாஜ் ஹோட்டல்களின் பொதுமேலாளர் இந்திராணி குப்தா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னை மக்களுக்காக’... ‘அம்மா உணவகம், சூப்பர் மார்க்கெட் முதல்’... ‘அவசர தேவைகளுக்காக மாகராட்சியின்’... ‘அசத்தலான சிறப்பு இணையதளம்’
- கணவருக்கு வந்த 'போன்'... 'கஷாயத்தில்' மயக்க மருந்து... 'நாடகமாடிய' மனைவி 'கடைசியில்' கொடுத்த 'ஷாக்'... 'மிரளவைக்கும்' சம்பவம்...
- ‘இந்த 2 விமானங்களில்'... ‘இந்த தேதியில் சென்னை வந்தவர்கள்’... ‘கண்டிப்பா இதை செய்துகொள்ளுங்கள்’... ‘சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’!
- 'தமிழகத்தில்' இன்று புதிதாக '74 பேருக்கு' கொரோனா... '485 ஆக' உயர்ந்த மொத்த 'பாதிப்பு'... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...
- '9 நாட்களில்' கட்டி முடிக்கப்பட்ட 'மருத்துவமனை'... '4 ஆயிரம் படுக்கை வசதிகள்...' 'வெண்டிலேட்டர்கள்...' 'பிரிட்டிஷ்' அரசின் வியக்க வைக்கும் 'சாதனை...'
- '48 மணி நேரத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்...' 'ஏற்கெனவே மருந்து இருக்கிறது...' 'ஆஸ்திரேலிய' மருத்துவர்களின் வியக்க வைக்கும் 'ஆய்வு முடிவு...'
- 'நாளை' முதல்... 'அத்தியாவசிய' பொருட்கள் 'விற்பனை' நேரம் 'குறைப்பு'... முதலமைச்சர் பழனிசாமி 'அறிவிப்பு'...
- 'பேபிக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதா'... 'ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த தம்பதி'...காத்திருந்த அதிசயம்!
- "நான் கொரோனாவை விட பயங்கரமானவன்" கைகளில் 'தடியுடன்' இருந்த 'போலீசார்' முன்னிலையில்... 'வீரவசனம்' பேசிய 'இளைஞருக்கு' நேர்ந்த 'பயங்கர பின்விளைவுகள்...'
- ‘கடையில யாரும் இல்ல'... 'அந்த மனசு தான் சார் கடவுள்'... சலுயூட் போட வைத்த 'கோவை' மக்கள்!